ஜூலையில் ரூ.1 லட்சம் கோடியை கடந்த ஜிஎஸ்டி வரி வசூல்… பொருளாதாரம் மீண்டெழுவதற்கான அறிகுறி!

 

ஜூலையில் ரூ.1 லட்சம் கோடியை கடந்த ஜிஎஸ்டி வரி வசூல்… பொருளாதாரம் மீண்டெழுவதற்கான அறிகுறி!

மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2021ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரிகள் (ஜிஎஸ்டி) வருவாய் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 393 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. எட்டு மாதங்களுக்குப்பின் ஜிஎஸ்டி வரி வருவாய் ஒரு லட்சம் கோடிக்கும் கீழ் கடந்த மாதம் சரிந்த நிலையில் மீண்டும் ஜூலை மாதம் ஒரு லட்சம் கோடியை எட்டியுள்ளது. 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.87,422 கோடி வசூலாகியிருந்தது.

ஜூலையில் ரூ.1 லட்சம் கோடியை கடந்த ஜிஎஸ்டி வரி வசூல்… பொருளாதாரம் மீண்டெழுவதற்கான அறிகுறி!

தற்போது அதைவிட 33 சதவீதம் இந்த ஆண்டு ஜூலை மாதம் வசூலாகியுள்ளது. நாட்டின் பொருளாதாரச் சூழல் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுபட்டு விரைவாக மீட்சி நிலையை நோக்கி நகர்ந்து வருவதன் எதிரொலியாகவே ஜூலை மாதம் ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சம் கோடியைக் கடந்துள்ளது. இதே போன்ற ஜிஎஸ்டி வரி வசூல் அடுத்தடுத்து மாதங்களும் தொடரும்.

Tamil Nadu's GST collections fall 15% in June 2020 - The Hindu

ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வரி ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 393 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி வரி 22 ஆயிரத்து 197 கோடி ரூபாய். மாநில ஜிஎஸ்டி வரி 28 ஆயிரத்து 541 கோடி ரூபாய். ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி 57 ஆயிரத்து 864 கோடி ரூபாய். இதில் செஸ் வரியாக 7 ஆயிரத்து 790 கோடி ரூபாய் கிடைத்துள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.