கொரோனாவை பதஞ்சலியின் ஆயுர்வேத மருந்து குணப்படுத்தும் என்று விளம்பரப்படுத்துவதை நிறுத்துங்கள்- மத்திய அரசு

கொரோனாவை பதஞ்சலியின் ஆயுர்வேத மருந்து குணப்படுத்தும் என்று விளம்பரப்படுத்துவதை நிறுத்துங்கள்- மத்திய அரசு

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொடிய நோயான கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன. இதற்கான முறையான தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படாததால், அதனை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடிக்கப்படாத இந்த இக்கட்டான சூழலில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக சமூக வலைதளங்களில் பல வதந்திகள் பரவி வருகின்றன.

கொரோனாவை பதஞ்சலியின் ஆயுர்வேத மருந்து குணப்படுத்தும் என்று விளம்பரப்படுத்துவதை நிறுத்துங்கள்- மத்திய அரசு

இந்நிலையில் கடந்த ஜூன் 14 ஆம் தேதி கொரோனா நோயை குணப்படுத்த மருந்து கண்டுபிடித்துவிட்டதாக பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், அந்த மருந்தை வைத்து 1000 பேரை குணப்படுத்திவிட்டதாகவும் பதஞ்சலி தெரிவித்தது. மேலும் கொரோனா வைரஸூக்கு சிகிச்சை அளிக்க பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனம் மருந்தை இன்று அறிமுகப்படுத்தியது.

கொரோனாவை பதஞ்சலியின் ஆயுர்வேத மருந்து குணப்படுத்தும் என்று விளம்பரப்படுத்துவதை நிறுத்துங்கள்- மத்திய அரசு

உத்ராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள யோக்பீத்தில் இந்த மருந்தை வெளியிட உள்ளதாக பதஞ்சை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆச்சார்யா பாலகிருஷ்ணா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா தொற்று நோய்க்கான முதல் மற்றும் முன்னணி ஆதாரங்களைக் கொண்ட SWASARI_VATI, CORONIL என்ற மருந்தை பெருமையுடன் வெளியிடுவதாக பாலகிருஷ்ணா குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, தங்கள் நிறுவனம் உருவாக்கியிருந்த ஆயுர்வேத மருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவரை 5 நாட்கள் முதல் 15 நாட்களுக்குள் குணமடையச் செய்ததாக மாதத் தொடக்கத்தில் பாலகிருஷ்ணா தெரிவித்திருந்தார்.இந்நிலையில் கொரோனாவை பதஞ்சலியின் ஆயுர்வேத மருந்து குணப்படுத்தும் என்று விளம்பரப்படுத்துவதை நிறுத்துங்கள் என பதஞ்சலி நிறுவனத்திற்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.