கொடூரமாக தாக்கும் புதிய வகை டெங்கு… இந்த அறிகுறிகள் இருந்தா உடனே ஹாஸ்பிட்டல் போங்க – எச்சரிக்கும் மத்திய அரசு!

 

கொடூரமாக தாக்கும் புதிய வகை டெங்கு… இந்த அறிகுறிகள் இருந்தா உடனே ஹாஸ்பிட்டல் போங்க – எச்சரிக்கும் மத்திய அரசு!

இந்தியாவை உலுக்கிய கொரோனா இரண்டாம் அலை தற்போது தான் ஓய்ந்திருக்கிறது. இருப்பினும் மூன்றாம் அலைக்கான அறிகுறி ஆங்காங்கே தென்படுவதால் கொஞ்சமாக பயம் எட்டிப் பார்க்கிறது. அதனால் தான் அனைவரும் கண்டிப்புடன் கொரோனா தடுப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மத்திய, மாநில அரசுகளும் வலியுறுத்தி வருகின்றன. கொரோனாவுக்கு எதிரான போராட்டமே இன்னும் முடியவில்லை. அதற்குள் டெங்கு எட்டிப் பார்த்து அச்சுறுத்துகிறது.

கொடூரமாக தாக்கும் புதிய வகை டெங்கு… இந்த அறிகுறிகள் இருந்தா உடனே ஹாஸ்பிட்டல் போங்க – எச்சரிக்கும் மத்திய அரசு!

டெங்குவை விரைந்து கவனிக்காமல் விட்டால் உயிரைக் குடிக்கக் கூடிய கொடிய காய்ச்சல். தமிழ்நாட்டுக்கு நன்கு பரிட்சையைமான காய்ச்சல் வேறு. இச்சூழலில் தற்போது பெரும் ஆபத்துகளை விளைவிக்கும் புதிய வகை டெங்கு பரவி வருவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. செரோடைப் – 2 என்ற வகையிலான டெங்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய தென் மாநிலங்களிலும் ஒருசில வடமாநிலங்களிலும் பரவி வருகிறது.

கொடூரமாக தாக்கும் புதிய வகை டெங்கு… இந்த அறிகுறிகள் இருந்தா உடனே ஹாஸ்பிட்டல் போங்க – எச்சரிக்கும் மத்திய அரசு!

இவ்வகை டெங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது. சாதாரண டெங்குவை விட அதிகளவு உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தவல்லது. ஆகவே இவ்வகை டெங்கு வைரஸ் பரவலை தொடக்கத்திலேயே தடுத்துநிறுத்த வேண்டும் எனவும் அதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண் 11 மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார். கீழ்கண்ட அறிகுறிகள் தெரிந்தவுடன் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் செல்லுமாறு மக்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

கொடூரமாக தாக்கும் புதிய வகை டெங்கு… இந்த அறிகுறிகள் இருந்தா உடனே ஹாஸ்பிட்டல் போங்க – எச்சரிக்கும் மத்திய அரசு!

இதன் அறிகுறிகள்:

1.அடிவயிற்றில் வலி
2.வாந்தி அல்லது மலத்தில் இரத்தம்
3.குமட்டல், வாந்தி ( 1 நாளில் குறைந்தது 3 முறை)
4.கண்கள், தசைகள், எலும்பு மூட்டு வலி
5.சோர்வடைந்த, அமைதியற்ற அல்லது எரிச்சலூட்டும்
6.மூக்கு அல்லது ஈறுகளில் இருந்து ரத்தப்போக்கு