மழை பாதிப்பு : நாகையில் மத்தியக் குழு ஆய்வு!

 

மழை பாதிப்பு : நாகையில் மத்தியக் குழு ஆய்வு!

கடந்த ஆண்டு அடுத்தடுத்து உருவான நிவர் மற்றும் புரெவி புயல்கள் மக்களின் வாழ்வை சீர்குலைத்தது. அதன் ஈரம் காய்வதற்குள், கடந்த ஜனவரி மாதம் பருவம் தவறி பெய்த மழை வெளுத்து வாங்கியது. டெல்டா மாவட்டங்களில் பொங்கல் திருநாளுக்கு முன்னர் அறுவடைக்கு வைத்திருந்த நெற்பயிர்கள், உளுந்து, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக பாதித்தன. நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்ததால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

மழை பாதிப்பு : நாகையில் மத்தியக் குழு ஆய்வு!

ஜனவரியில் பெய்த திடீர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதன் படி, மழை பாதிப்புகளை கண்டறிய மத்தியக் குழு நேற்று புதுக்கோட்டை வந்தது. புதுக்கோட்டையில் மழை பாதிப்புகளை பார்வையிட்ட மத்தியக் குழு தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலும் ஆய்வு மேற்கொண்டது. இந்த நிலையில், மழை பாதிப்புகளை ஆய்வு செய்யும் இரண்டாம் நாளான இன்று மத்தியக் குழு நாகைக்கு சென்றிருக்கிறது.

மத்தியக் குழுவினரிடம் விவசாயிகள், ஜனவரி மழை பயிர்கள் அனைத்தையும் பாதிப்படையச் செய்து விட்டது. அவை வைக்கோலுக்கு கூட உதவாது. ஆகையால் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அதை கேட்டுக் கொண்ட அதிகாரிகள், உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துள்ளனர்.