கொரோனாவை கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பு… கை விரித்த மத்திய அரசு!

 

கொரோனாவை கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பு… கை விரித்த மத்திய அரசு!

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. நாளொன்றுக்கு இரண்டரை லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பி இருப்பதால், நோயாளிகள் வெளியே காத்திருக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பு… கை விரித்த மத்திய அரசு!

இந்த நிலையில், கொரோனா பாதிப்பு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், கொரோனா வைரஸை எதிர்கொள்ள மத்திய அரசு மாநில அரசுகளுடன் துணை நிற்கும். ஆனால், கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டியது மாநில அரசுகளின் பொறுப்பு. மாநில அரசுகளே கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். தேவையை எதிர்கொள்வது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு தேவையைக் கட்டுப்படுத்துவது முக்கியம். அதனால் மாநில அரசுகள் ஆக்சிஜனை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.

கொரோனாவை கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பு… கை விரித்த மத்திய அரசு!

முன்னதாக, மகாராஷ்டிராவில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு இருப்பதாக முதல்வர் உத்தவ் தாக்கரே முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த பியூஷ் கோயல், ஆக்சிஜன் சிலிண்டர்கள் உற்பத்தியை அதிகரித்திருப்பதாகவும் பாதிப்பு அதிகமாக இருக்கும் மாநிலங்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை விநியோகிக்க அரசு முடிவு செய்திருப்பதாகவும் விளக்கம் அளித்திருந்தார். மேலும் கொரனோ இரண்டாவது அலையை அரசியலாக்க வேண்டாமென அவர் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.