‘பெண்களுக்கு எதிரான குற்றங்கள்’ கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவு!

 

‘பெண்களுக்கு எதிரான குற்றங்கள்’ கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவு!

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. அண்மையில் ஹத்ராஸில் 19 வயதான இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியத் தொடர்ந்து அப்பகுதியிலேயே மேலும் ஒரு பெண் உயிரிழந்தார். அந்த வகையில் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர்.

‘பெண்களுக்கு எதிரான குற்றங்கள்’ கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவு!

இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீதான தண்டனையை கடுமையாக்கினால் தான், குற்றங்கள் குறையும் என்பதே மக்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது. இந்த நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதியுள்ளது.

‘பெண்களுக்கு எதிரான குற்றங்கள்’ கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவு!

அந்த கடிதத்தில், வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்வதோடு தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரின் தகவல்களை பாதுகாத்து வைக்க வேண்டும் என்றும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைப்பதில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.