சுற்றுச்சூழல் மதிப்பீடு வரைவு அறிக்கையை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை – மத்திய அரசு

 

சுற்றுச்சூழல் மதிப்பீடு வரைவு அறிக்கையை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை – மத்திய அரசு

மத்திய அரசு EIA எனும் புதிய சுற்றுச்சூழல் திட்டத்திற்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது. இதனால் விவசாயமும் இயற்கை வளங்களும் பெரிதும் பாதிக்கப்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய சூழலியல் தாக்க மதிப்பீடு 2020 ஆம் ஆண்டு வரைவு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எதிரானது எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சுற்றுச்சூழல் மதிப்பீடு வரைவு அறிக்கையை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை – மத்திய அரசு

இந்நிலையில் சுற்றுச்சூழல் மதிப்பீடு வரைவு அறிக்கைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் சுற்றுச்சூழல் மதிப்பீடு வரைவு அறிக்கையை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் தற்போது எடுக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஈஐஏ வரைவறிக்கையை தமிழில் மொழிபெயர்க்கக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு இத்தகவலை தெரிவித்துள்ளது. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டும் என்றும், அதுவரை வரைவு அறிக்கைக்கு தடை விதிக்கக் கோரி மீனவர் அமைப்பு சார்பில் தியாகராஜன் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளதாகவும், இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இதனைதொடர்ந்து தியாகராஜன் தொடர்ந்த வழக்கு செப்டம்பர் 8 ஒத்திவைக்கப்பட்டது.