ஈபிஎஸ் லெட்டர்… உடனடியாக நடவடிக்கை எடுத்த மத்திய அரசு!

 

ஈபிஎஸ் லெட்டர்… உடனடியாக நடவடிக்கை எடுத்த மத்திய அரசு!

தமிழகத்தில் கொரனோ நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்பட்டு வருவதால் அந்த மருந்துக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், மருத்துவ பணிகள் கழகத்தின் சார்பில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கடந்த 26ஆம் தேதி முதல் ரெம்டெசிவிர் விற்பனை தொடங்கியது. மருந்தை வாங்க மக்கள் கூட்டம் அதிகரித்ததால் மதுரை, திருச்சி, சேலம் உட்பட 5 மாவட்டங்களில் விற்பனை தொடங்கியது.

ஈபிஎஸ் லெட்டர்… உடனடியாக நடவடிக்கை எடுத்த மத்திய அரசு!

இருப்பினும், சென்னையில் மக்கள் கூட்டம் குறையவில்லை. இதையடுத்து, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு ரெம்டெசிவிர் விற்பனை இடமாற்றம் செய்யப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் தமிழகத்துக்கு வழங்கும் ரெம்டெசிவிர் மருந்தை அதிகரிக்குமாறு பிரதமர் மோடிக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார். தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் கூடுதலாக ஆக்சிஜன் சப்ளை செய்யுமாறும் அந்த கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார்.

ஈபிஎஸ் லெட்டர்… உடனடியாக நடவடிக்கை எடுத்த மத்திய அரசு!

இந்த நிலையில் ஈபிஎஸ்சின் கோரிக்கைக்கு செவிசாய்த்த மத்திய அரசு, தமிழகத்திற்கான ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீட்டை 3.50 லட்சமாக அதிகரித்துள்ளது. இதனால், அனைத்து மாநிலங்களுக்கான மொத்த ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீட்டை 76 லட்சமாக உயர்ந்துள்ளது. முன்னதாக, தமிழகத்திற்கு கூடுதலாக 20,000 ரெம்டெசிவிர் மருந்துகளை வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.