ரூ.1.5 லட்சம் கோடி ஜி.எஸ்.டி பாக்கி வைத்துள்ள மத்திய அரசு! – நாடாளுமன்றத்தில் தகவல்

ரூ.1.5 லட்சம் கோடி ஜி.எஸ்.டி பாக்கி வைத்துள்ள மத்திய அரசு! – நாடாளுமன்றத்தில் தகவல்

மத்திய அரசு மாநிலங்களுக்கு ரூ.1.5 லட்சம் கோடி அளவுக்கு ஜி.எஸ்.டி பாக்கி வைத்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளாமல் ஜி.எஸ்.டி வரிவிதிப்பைக் கொண்டு வந்ததால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதாக தொடர் குற்றச்சாட்டு உள்ளது. ஜி.எஸ்.டி காரணமாக மாநில அரசுகளுக்கு ஏற்படும்

ரூ.1.5 லட்சம் கோடி ஜி.எஸ்.டி பாக்கி வைத்துள்ள மத்திய அரசு! – நாடாளுமன்றத்தில் தகவல்

வருவாய் இழப்பை தற்காலிகமாக ஈடுகட்ட மத்திய அரசு நிதி உதவி அளித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இப்படி வழங்க வேண்டிய நிதியில் மத்திய அரசு பாக்கி வைத்து உள்ளதாக மாநிலங்கள் வேதனை தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் மாநிலங்களுக்கான இழப்பீடு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர்

ரூ.1.5 லட்சம் கோடி ஜி.எஸ்.டி பாக்கி வைத்துள்ள மத்திய அரசு! – நாடாளுமன்றத்தில் தகவல்

அனுராக் சிங் தாக்கூர் பதில் அளித்துள்ளார். அதில், 2020-21 ஜிஎஸ்டி இழப்பீடு பாக்கி 1.51 லட்சம் கோடியாக உள்ளது. இதில் மகாராஷ்டிராவுக்கு ரூ.22,485 கோடியும், கர்நாடகாவுக்கு ரூ.13,763 கோடியும், உத்தரப் பிரதேசத்துக்கு ரூ.11,742 கோடியும், குஜராத்துக்கு ரூ.11,563 கோடியும், தமிழகத்துக்கு ரூ.11,269 கோடியும் வழங்க உள்ளது என்று கூறியுள்ளார்.

ரூ.1.5 லட்சம் கோடி ஜி.எஸ்.டி பாக்கி வைத்துள்ள மத்திய அரசு! – நாடாளுமன்றத்தில் தகவல்

மேலும் மத்திய அரசிடம் நிதி இல்லாத காரணத்தால் தற்போது வழங்க முடியவில்லை என்று கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி வசூல் குறைவாக உள்ளதால் தற்போது இந்த பாக்கியை செலுத்த முடியாது. இதை எதிர்கொள்ள மாநிலங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன” என்று அவர் கூறினார்.