109 வழித்தடங்கள் தயார்… பயணிகள் ரயிலை இயக்க வாருங்கள்… தனியாரைக் கூவிக்கூவி அழைக்கும் மத்திய அரசு

 

109 வழித்தடங்கள் தயார்… பயணிகள் ரயிலை இயக்க வாருங்கள்… தனியாரைக் கூவிக்கூவி அழைக்கும் மத்திய அரசு

இந்தியாவில் 109 வழித்தடங்களில் தனியார் ரயிலை இயக்க மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ரயில்வேயில் தனியாரை அனுமதித்து பல மாதங்கள் ஆகிவிட்டது. பல லாபம் கொழிக்கும் வழித்தடங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது மேலும் 109 வழித்தடங்கள், 151 அதிநவீன ரயில்களை மத்திய அரசு தனியாருக்கு தாரைவார்க்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

109 வழித்தடங்கள் தயார்… பயணிகள் ரயிலை இயக்க வாருங்கள்… தனியாரைக் கூவிக்கூவி அழைக்கும் மத்திய அரசுஇந்த ரயில்களில் குறைந்தது 16 பெட்டிகள் இணைக்கப்படும். மணிக்கு 160 கி.மீ வேகத்தில் இயக்கும் திறன் கொண்டது. இந்த ரயில்களை இந்திய ரயில்வே துறை ஓட்டுநர் மற்றும் கார்டுகள் இயக்குவார்கள். “ரயில்கள் தனியார்மயமாவதால், மத்திய அரசு ரயில்கள் பராமரிப்பதற்கான செலவு, இயக்க செலவு குறையும் என்றும் வேலை வாய்ப்பு, பயணிகள் பாதுகாப்பு அதிகரிக்கும் என்றும் பயணிகளுக்கு உலகத் தரத்திலான பயண அனுபவம் கிடைக்கும்” என்றும் ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.