அமெரிக்காவில் அடுத்தடுத்து இரண்டு பயங்கர நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கையால் பீதி

அமெரிக்காவில் அடுத்தடுத்து இரண்டு பயங்கர நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கையால் பீதி

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் இன்று இரண்டு முறை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

அமெரிக்காவில் அடுத்தடுத்து இரண்டு பயங்கர நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கையால் பீதி
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தின் டெலிங்காமில் இருந்து 437 கிலோ மீட்டர் தொலைவில், பெரிவில்லே என்ற இடத்தில் இருந்து 105 கி.மீ தொலைவில் நில நடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் 28 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இதுவும் 7.8 ரிக்டராக பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகக் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் தெற்கு அலாஸ்கா, அலாஸ்கா தீபகற்பம் பகுதியில் சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவில் அடுத்தடுத்து இரண்டு பயங்கர நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கையால் பீதி
இந்த நிலையில் அலாஸ்காவின் சேண்ட் பாய்ண்ட் நகரத்திலிருந்து 103 கி.மீ தூரத்தில் 17.7 கி.மீ ஆழத்தில் மீண்டும் ஒரு நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 6.1 என்ற அளவில் பதிவானதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட சேதங்கள் பற்றிய தகவல் வெளியாகவில்லை. அலாஸ்காவில் கடந்த மாதம் முதல் நில அதிர்வு உணரப்பட்டு வந்தது. ரிக்டர் அளவு கோளில் 3 என்ற அளவில் அது பதிவானதால் பெரிதாக யாரும் கவலைப்படவில்லை. தற்போது அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது அலாஸ்கா மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.