நூற்றாண்டு கொண்டாடும் முஸ்லீம் பல்கலைக்கழகம் -பிரதமர் மோடி பங்கேற்பு !

 

நூற்றாண்டு கொண்டாடும் முஸ்லீம் பல்கலைக்கழகம் -பிரதமர் மோடி பங்கேற்பு !

அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள முஸ்லீம் பல்கலைக் கழகம் நூற்றாண்டுகள் பழமையானது. 1875 ஆம் ஆண்டில் முஸ்லீம்- ஆங்கிலோ இண்டியன் கல்லூரியாக தொடங்கப்பட்ட கல்வி நிறுவனம், பின்னர் 1920 ஆம் ஆண்டில், அலிகார் பல்கலைக் கழகமாக உருவாக்கப்பட்டது. இந்த பல்கலைக் கழகத்துக்கு இந்தியாவில் மூன்று இடங்களில் உறுப்பு கல்வி நிறுவனங்கள் உள்ளன.

நூற்றாண்டு கொண்டாடும் முஸ்லீம் பல்கலைக்கழகம் -பிரதமர் மோடி பங்கேற்பு !

உலக அளவில் புகழ்பெற்ற அலிகார் பல்கலைக்கழகம், சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியுள்ளது. பல முக்கிய ஆளுமைகள் , விஞ்ஞானிகளை உருவாக்கியுள்ளது. முப்தி முகமது சய்யித், தாயான் சந்த் என பலரும் இந்த பல்கலைக் கழகத்தில் இருந்து வந்தவர்கள்தான். இந்த பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் டிசம்பர் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வழியாக கலந்து கொள்ள உள்ளதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். இந்த தகவலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் தாரிக் மன்சூர் உறுதி செய்துள்ளார்.

நூற்றாண்டு கொண்டாடும் முஸ்லீம் பல்கலைக்கழகம் -பிரதமர் மோடி பங்கேற்பு !

பிரதமர் கலந்து கொள்வதை ஒட்டி பல்வேறு அரசியல் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். தங்களது அழைப்பை ஏற்று பிரதமர் மோடி கலந்து கொள்வது, தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். பிரதமர் கலந்து கொள்வதால், கல்லூரி வளர்ச்சிக்கும் மாணவர்களின் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும் என்றும் மன்சூர் கூறினார் . அலிகார் பல்கலைக்கழகம் பாஜக கொள்கைகளுக்கு நேரெதிரானது என்பது குறிப்பிடத்தக்கது. பாஜகவின் பல்வேறு தலைவர்களும் அலிகார் பல்கலைக்கழகத்தின் மாணவர்களை தொடர்ந்து விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது . குறிப்பாக அலிகார் பல்கலைக் கழகத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

நூற்றாண்டு கொண்டாடும் முஸ்லீம் பல்கலைக்கழகம் -பிரதமர் மோடி பங்கேற்பு !

அரசியல் ரீதியாக பல்வேறு ஜனநாயக கோரிக்கைகளுக்கான அலிகார் பல்கலைக் கழக மாணவர்கள் போராடியுள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டம், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்ட விவகாரங்களில் அலிகார் பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டம் உலக அளவில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றது. அங்கு உருவான போராட்டம்தான் டெல்லி ஜாமியா பல்கலைக் கழகத்தில் பரவியது குறிப்பிடத்தக்கது.

நூற்றாண்டு கொண்டாடும் முஸ்லீம் பல்கலைக்கழகம் -பிரதமர் மோடி பங்கேற்பு !

இதையடுத்து இந்தியா முழுவதும் மாணவர் போராட்டங்கள் வெடித்தன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், இந்த பல்கலைக்கழகத்தின் மாணவர் அறையில் முகமது அலி ஜின்னாவின் புகைப்படம் மாட்டப்பட்டது. அந்த படத்தை மாட்டக்கூடாது என அலிகார் சட்டமன்ற உறுப்பினர் சர்ச்சைகளை ஏற்படுத்தினார். இது தொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தருக்கு சட்ட ரீதியான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பின்னர் பல்கலைக்கழக துணைவேந்தர் அளித்த விளக்கத்தில், அலிகார் பல்கலை கழகத்தை உருவாக்கியவர்களில் முகமது அலி ஜின்னாவும் ஒருவர் என்றும், இந்த பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் என்றும் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

நூற்றாண்டு கொண்டாடும் முஸ்லீம் பல்கலைக்கழகம் -பிரதமர் மோடி பங்கேற்பு !

அலிகார் பல்கலைக் கழகத்தின் நிகழ்ச்சிகளில், இந்திய பிரதமர்கள் கலந்து கொள்வது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர் 1964 ஆம் ஆண்டில், அப்போது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி கலந்துகொண்டார். அதற்குப் பின்னர், சுமார் 56 ஆண்டுகள் கழித்த்து தற்போது இந்த பல்கலைக்கழகத்தின் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.