‘மயானங்களில் சிசிடிவி கேமரா அமைத்து கண்காணிக்கப்படும்’!

 

‘மயானங்களில் சிசிடிவி கேமரா அமைத்து கண்காணிக்கப்படும்’!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் அதே வேளையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், மயானங்களில் உடல்களை எரிக்க இடமில்லாமல் சடலங்கள் வரிசையில் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னையில் சடலங்கள் நீண்ட வரிசையில் எரியூட்டப்படுவதற்காக காத்திருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

‘மயானங்களில் சிசிடிவி கேமரா அமைத்து கண்காணிக்கப்படும்’!

இந்த நிலையில், தேனாம்பேட்டையில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டோருக்கு ஆலோசனை வழங்கும் கட்டுப்பாட்டு மையத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங், சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், எம்ப தயாநிதி மாறன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ககன்தீப்சிங், சென்னையில் உள்ள மின் மயானங்களில் சடலங்கள் காத்திருப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மயானங்களில் தொடர்ந்து பிறகு பிணங்களை எரித்தால் இயந்திரம் பழுதாகக் கூடும் என்றும் தெரிவித்தார்.

‘மயானங்களில் சிசிடிவி கேமரா அமைத்து கண்காணிக்கப்படும்’!

தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் உள்ள மயானங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என்றும் ஊரடங்கி மீறியதாக இதுவரை ஒரு கோடியே 44 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டதாகவும் கூறினார். மேலும், சென்னையில் ஊரடங்கு முழுமையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க அமைக்கப்பட்ட குழு இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.