ஸ்டாலினை சந்தித்த முக்கிய புள்ளிகள்…வைரல் போட்டோஸ்!

 

ஸ்டாலினை சந்தித்த முக்கிய புள்ளிகள்…வைரல் போட்டோஸ்!

தமிழகத்தின் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. 159 இடங்களில் திமுக கூட்டணி முன்னணியில் வகித்த நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தின் அடுத்த முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனால் திமுக ஆட்சியமைக்க இன்று காலை 10 மணிக்கு மு.க. ஸ்டாலின், ஆளுநரை சந்தித்து உரிமை கோருகிறார். இதனால் கடந்த 10 ஆண்டுகளாக திமுக ஆட்சி இடம் பெறாமல் இருந்த நிலையில் மீண்டும் ஆட்சி அமைய உள்ளதை அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

மூத்த பத்திரிகையாளர் ‘இந்து’ ராம்

தினமணி நாளிதழின் ஆசிரியர் கி.வைத்தியநாதன்

‘தினகரன்’ நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ்

டைம்ஸ் ஆஃப் இந்தியா உதவித் துணைத்தலைவர் மணிகண்டன்