“கலைமாமணி விருது” பெறும் பிரபலங்கள் : தமிழக அரசு அறிவிப்பு!

 

“கலைமாமணி விருது” பெறும் பிரபலங்கள் : தமிழக அரசு அறிவிப்பு!

பழம்பெரும் நடிகைகள் சரோஜா தேவி, சவுகார் ஜானகி, நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

“கலைமாமணி விருது” பெறும் பிரபலங்கள் : தமிழக அரசு அறிவிப்பு!

நடிகர் சிவகார்த்திகேயன், யோகி பாபு, ராமராஜன், ஐசரி கணேசன் , கலைப்புலி தாணுவுக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

“கலைமாமணி விருது” பெறும் பிரபலங்கள் : தமிழக அரசு அறிவிப்பு!

அதில் நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, சங்கீதா, மதுமிதாவுக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல் பழம்பெரும் நடிகைகள் சரோஜாதேவி, சவுகார் ஜானகி, பின்னணி பாடகி ஜமுனாராணி கலைமாமணி விருது வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

“கலைமாமணி விருது” பெறும் பிரபலங்கள் : தமிழக அரசு அறிவிப்பு!

டிவி நடிகைகள் நித்யா, சாந்தி வில்லியம்ஸ் ,டிவி நடிகர் நந்தகுமார் , ரவிமரியாவுக்கும் கலைமாமணி விருது வழங்கப்படவுள்ளது. இசையமைப்பாளர் டி இமான், தீனா, இயக்குநர் கௌதம் மேனன் ,மனோஜ் குமார் , ரவிமரியாவுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருது அறிவிக்கப்பட்டவர்கள் நாளை மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகம் வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.