சமூக இடைவெளியுடன் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமியர்கள்!

சமூக இடைவெளியுடன் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமியர்கள்!

ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளை மகிழ்ச்சியுடன் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இன்று கொண்டாடி வருகின்றனர். ஊரடங்கால் வழிபாட்டு தளங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளிலேயே தொழுகை செய்து வருகின்றனர்.

சமூக இடைவெளியுடன் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமியர்கள்!

பொதுவாக நோன்பு முடிந்து ரமலான் கொண்டாடும் இஸ்லாமியர்கள் மைதானம், பள்ளிவாசல்களில் நடைபெறும் சிறப்புத் தொழுகையில் கிட்டதட்ட 10,000 பேர் பங்கேற்பார்கள்.

சமூக இடைவெளியுடன் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமியர்கள்!

ஆனால் இந்த முறை ஊரடங்கால் ரம்ஜான் பண்டிகை களையிழந்துள்ளது. கோயம்புத்தூரில் இஸ்லாமிய சகோதரர்கள் இந்த ஆண்டு ரமலான் பண்டிகையை புத்தாடைகள் அணியாமலும், பள்ளிவாசலுக்கு செல்லாமலும், இனிப்புகளை வழங்காமலும் வீட்டில் இருந்தபடி இறைவனை தொழுதனர். மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி முதன்முறையாக இவ்வாறு ரமலான் கொண்டாடினாலும் கூட மக்களின் நலனுக்காக இப்படி செய்வதில் தவறில்லை என்றும் இஸ்லாமியர்கள் கூறிவருகிறார்கள்.