வயிற்றுப்போக்கு, மூக்கு ஒழுகுதல் இருந்தாலும் கொரோனாவுக்கான அறிகுறிதான்… அமெரிக்க அமைப்பு தகவல்..

வயிற்றுப்போக்கு, மூக்கு ஒழுகுதல் இருந்தாலும் கொரோனாவுக்கான அறிகுறிதான்… அமெரிக்க அமைப்பு தகவல்..

கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதல் அது குறித்து மருத்துவ ஆய்வாளர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். முதலில் கொரோனா வைரஸால் ஏற்பட்ட நோய் சுவாச நோயாக கருதப்பட்டது. ஆனால் புதிய தகவல்கள் கிடைத்த பிறகு கொரோனா வைரஸ் உடலின் அனைத்து முக்கிய உறுப்புகளையும் பாதிக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது.

வயிற்றுப்போக்கு, மூக்கு ஒழுகுதல் இருந்தாலும் கொரோனாவுக்கான அறிகுறிதான்… அமெரிக்க அமைப்பு தகவல்..

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி.), கோவிட்-19 தொடர்பாக தொடர்ந்து ஆய்வு செய்து கொரோனா வைரஸல் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தொடர்பான தகவல்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் முதலில், காய்ச்சல், இருமல், சுவாசிப்பதில் சிக்கல், உடம்பு வலி, சுவை மற்றும் நறுமணத்தை உணரும் தன்மை இழப்பு, தலைவலி, சோர்வு மற்றும் தொண்டை புண் ஆகியவற்றை கொரோனா வைரஸ் அறிகுறிகள் பட்டியலில் சேர்த்து இருந்தது.

வயிற்றுப்போக்கு, மூக்கு ஒழுகுதல் இருந்தாலும் கொரோனாவுக்கான அறிகுறிதான்… அமெரிக்க அமைப்பு தகவல்..

இந்நிலையில் தற்போது, மூக்கடைப்பு அல்லது மூக்கு ஒழுகுதல், குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகிய மூன்றையும் கொரோனா வைரஸ் அறிகுறிகள் பட்டியலில் இணைத்துள்ளது. இந்த பட்டியலில் சாத்தியமான அனைத்து அறிகுறிகளும் இல்லை. கோவிட்-19 தொடர்பான புதிய தகவல்களை அறியும் போது சி.டி.சி. இந்த பட்டியலை தொடர்ந்து புதுப்பிக்கும்.