திருவள்ளூர் வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமரா இயங்காததால் பரபரப்பு!

 

திருவள்ளூர் வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமரா இயங்காததால் பரபரப்பு!

திருவள்ளூர்

திருவள்ளூரில் இன்று அதிகாலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள ஸ்டாரங் ரூமில் திடீரென கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட திருவொற்றியூர், அம்பத்தூர், மாதவரம் தொகுதிகளில், சட்டமன்ற தேர்தலில் வாக்குகள் பதிவான, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டில் உள்ள ஶ்ரீராம் தொழில்நுட்ப கல்லூரியில் வைக்கப்பட்டு உள்ளது. இங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சியினர் 24 மணிநேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமரா இயங்காததால் பரபரப்பு!

இந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் இருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயல்பட வில்லை. இதனை கண்டு அங்கு கண்காணிப்பு பணியில் இருந்த திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, இதுகுறித்து பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் அவர்கள் புகார் தெரிவித்தனர்.

புகாரின் பேரில், அதிகாரிகள் சிசிடிவி கேமராக்களை துரிதமாக பழுது பார்த்து, சுமார் 1 மணி நேரத்திற்கு பின் மீண்டும் இயங்க வைத்தனர். அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தால் திருவள்ளூர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.