பொதுத்தேர்வு ரத்தாவதை தடுக்க புது திட்டம்-கல்வியாண்டை இரண்டாக பிரித்து தேர்வு!

 

பொதுத்தேர்வு ரத்தாவதை தடுக்க புது திட்டம்-கல்வியாண்டை இரண்டாக பிரித்து தேர்வு!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக, பொதுத்தேர்வுகளை நடத்த முடியாத சூழல் நிலவுகிறது. இதை கருத்தில் கொண்டு, சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், உத்தரகண்ட், ஒடிசா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யப்பட்டன. சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவை எந்த முறையில் நிர்ணயிக்கலாம் என்பது குறித்து ஆய்வுசெய்ய 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

பொதுத்தேர்வு ரத்தாவதை தடுக்க புது திட்டம்-கல்வியாண்டை இரண்டாக பிரித்து தேர்வு!

இந்நிலையில் நடப்பு கல்வியாண்டு முதல் சிறப்பு மதிப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தவிருப்பதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. அதன்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு கல்வியாண்டை இரண்டாக பிரித்து தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு நடத்த முடியாமல் போகும் சூழலைத் தவிர்க்கவே இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மொத்த பாடத்திட்டத்தை இரண்டாக பிரித்து முதல் பருவம் & இரண்டாம் பருவம் என்று தேர்வு நடத்தப்படும் எனவும் பள்ளிகள் CBSE மற்றும் NCERT வெளியிட்டுள்ள பாடத்திட்டத்தைப் பின்பற்றி வகுப்புகளை நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பருவ முடிவிலும் அகமதிப்பீட்டு தேர்வும் நடத்தப்படும்.கொரோனா சூழல் சரியாகும் வரை ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.