சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எடுக்குமாறு அரசு அறிவுறுத்தியதன் பேரில், பள்ளி கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கிவிட்டன. ஆனால், அரசுப் பள்ளிகளில் இதுவரை ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படவில்லை. இதனிடையே மாணவர்களுக்கு நடக்கவிருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. மேலும், கொரோனாவால் நிலவி வரும் இந்த இக்கட்டான சூழலில் பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது.

வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும் கல்வி ஆண்டு, இந்த வருடம் ஜூலை ஆகியும் இன்னும் தொடங்கப்படவில்லை. கொரோனா வைரஸ் தாக்கம் ஓரளவு குறைந்த பிறகே மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பள்ளிகள் திறந்த பின்னர் மாணவர்கள் குறைந்த காலத்தில் முழுமையான பாடத்திட்டத்தை படிக்க முடியாது என்பதால் பாடத்திட்டத்தை குறைக்க வேண்டும் என்று பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வியாளர்களின் ஆலோசனைப்படி பாடத்திட்டங்களை குறைக்க முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

Most Popular

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியாகிறது. தமிழகத்தில் கொரோனா  பாதிப்பால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்டது.  இருப்பினும் அதற்கான தேர்வு...

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை...

சாத்தான்குளத்தில் தந்தை- மகன் கொலையில் கைதான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை திடீர் மரணம்!

சாத்தான் குளத்தில் தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் தாக்கப்பட்டு...

கேஸை திறந்துவிட்டு மகள்களை கொல்ல முயன்ற தந்தை… கதறிய மனைவி பூட்டை உடைத்து காப்பாற்றிய போலீஸ்

புகார் கொடுத்ததால் மனைவி மீதான கோபத்தில் பிள்ளைகளை வீட்டில் பூட்டி கேஸ் பற்ற வைக்க முயன்ற கணவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். பிள்ளைகளை உயிரோடு எரிக்க முயன்ற சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை...