சிபிஎஸ்இ +2 தேர்வு தொடர்பான வழக்குகள் நாளை விசாரணை!

 

சிபிஎஸ்இ +2 தேர்வு தொடர்பான வழக்குகள் நாளை விசாரணை!

டபுள் மாஸ்க் அணிவித்து சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ஒரு மாணவர் தரப்பு வாதம் செய்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் நலன் கருதி சிபிஎஸ்சி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அண்மையில் பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதேசமயம் மாணவர்களுக்கு மதிப்பெண் மதிப்பீடு வழிமுறையை வகுப்பதற்கு குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்த குழுவின் பரிந்துரையின்படி இறுதி மதிப்பெண் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சிபிஎஸ்இ +2 தேர்வு தொடர்பான வழக்குகள் நாளை விசாரணை!

மத்திய அரசின் பொதுத்தேர்வு ரத்து முறையை வரவேற்ற உச்சநீதிமன்றம் மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு நடைமுறையை விரைந்து வகுத்து சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. அதன்படி 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு முன்பாக நடத்தப்பட்ட தேர்வுகளில் இருந்து 40 சதவீத மதிப்பெண்கள் , பத்தாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வுகளில் இருந்து 30 சதவீத மதிப்பெண் எடுத்துக்கொள்ளப்பட்டு பிளஸ் டூ மாணவர்களுக்கான இறுதி மதிப்பெண் மதிப்பீடு செய்யப்படும் என மத்திய அரசு விரிவான விளக்க உரையை தாக்கல் செய்தது. அத்துடன் தேர்வு முடிவுகள் ஜூலை 31-ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும்என்றும் கூறியிருந்தது . இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கு எந்தவித பாரபட்சமும் காட்டக்கூடாது . அதேபோல் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் மாணவர்களின் கருத்துகளைக் கேட்பது, திருப்தியில்லாத மாணவர்களுக்கான மறுத்தேர்வு எப்போது நடத்தப்படும் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க உத்தரவிட்டது.

சிபிஎஸ்இ +2 தேர்வு தொடர்பான வழக்குகள் நாளை விசாரணை!

இந்நிலையில் சிபிஎஸ்இ மதிப்பெண் திட்டத்தில் திருப்தி இல்லாத மாணவர்கள் தேர்வு எழுத ஏற்பாடு; செய்யப்பட்டுள்ளது . அவர்களுக்கு ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை தேர்வுகள் நடத்தப்படும் என்றுஉச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதேசமயம் டபுள் மாஸ்க் அணிந்து சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என மாணவர்களின் ஒரு தரப்பு கூறியுள்ளனர். உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மதிப்பீடு குறித்த வாதத்தின் போது ஒரு மாணவர் தரப்பு இவ்வாறு தெரிவித்துள்ளது. சிபிஎஸ்சி மதிப்பெண் முறை மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று கூறியுள்ள நிலையில் சிபிஎஸ்இ தொடர்பான அனைத்து வழக்குகளும் நாளை விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.