நிலக்கரி ஊழல்.. அபிஷேக் பானர்ஜி மனைவியிடம் 1 மணி நேரம் விசாரணை நடத்திய சி.பி.ஐ.. வீட்டுக்கு வந்த மம்தா

 

நிலக்கரி ஊழல்.. அபிஷேக் பானர்ஜி மனைவியிடம் 1 மணி நேரம் விசாரணை நடத்திய சி.பி.ஐ.. வீட்டுக்கு வந்த மம்தா

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜிரா பானர்ஜியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர்.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி. இவர் திரிணாமுல் காங்கிரஸ் நாடளுமன்ற மக்களவை உறுப்பினராக உள்ளார். இவரது மனைவி ருஜிரா பானர்ஜி. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சி.பி.ஐ. அதிகாரிகள் அபிஷேக் பானர்ஜியின் வீட்டுக்கு சென்று ருஜிரா பானர்ஜியிடம் நிலக்கரி மோசடி வழக்கில் விசாரிக்க வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கினர். இதனையடுத்து ருஜிரா பானர்ஜி சி.பி.ஐ.க்கு கடந்த திங்கட்கிழமையன்று பதில் கடிதம் எழுதினார்.

நிலக்கரி ஊழல்.. அபிஷேக் பானர்ஜி மனைவியிடம் 1 மணி நேரம் விசாரணை நடத்திய சி.பி.ஐ.. வீட்டுக்கு வந்த மம்தா
ருஜிரா பானர்ஜி

அந்த கடிதத்தில், என்னை விசாரிப்பதற்கான காரணம் அல்லது விசாரணையின் பொருள் என்னவென்று எனக்கு தெரியவில்லை என்றாலும், உங்கள் வசதிக்கேற்ப நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நீங்கள் எனது இல்லத்து்ககு வரலாம். உங்கள் வரும் நேரத்தை தயவு செய்து எனக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் என்று தெரிவித்து இருந்தார். அதனை சி.பி.ஐ. ஏற்றுக்கொண்டது. இதனையடுத்து அபிஷேக் பானர்ஜியின் வீட்டுக்கு நேற்று காலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் சென்றனர். அங்கு ருஜிரா பானர்ஜியிடம் சுமார் ஒரு மணி நேரம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

நிலக்கரி ஊழல்.. அபிஷேக் பானர்ஜி மனைவியிடம் 1 மணி நேரம் விசாரணை நடத்திய சி.பி.ஐ.. வீட்டுக்கு வந்த மம்தா
மம்தா பானர்ஜி

முன்னதாக சி.பி.ஐ. அதிகாரிகள் கொல்கத்தாவில் உள்ள ருஜிரா பானர்ஜியின் சகோதரி மேனகா காம்பீர் வீட்டுக்கு ஒரு சி.பி.ஐ. அதிகாரிகள் குழு ஒன்று சென்றது. அவரிடம் சுமார் 3 மணி நேரம் அதிகாரிடம் விசாரணை நடத்தினர். அபிஷேக் பானர்ஜியின் வீட்டுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் வருவதற்கு முன்னதாக, முதல்வர் மம்தா பானர்ஜி அங்கு சென்றார். சுமார் பத்து நிமிடங்கள் அங்கு இருந்தார். அதன் பிறகு அங்கியிருந்து சென்று விட்டார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் ருஜிரா பானர்ஜியின் பேக்குகளை எக்ஸ்ரே கண்டுபிடிக்கும் எந்திரத்தில் பரிசோதனை செய்தபோது அதில் கணிசமான அளவு தங்கம் இருப்பது தெரியவந்தது. அது முதல் இவர் மீது சந்தேகப்பார்வை விழுந்தது. இது தொடர்பான வழக்கில் கொல்கத்தா நீதிமன்றம் 2017ல் ருஜிராவுக்கு நிவாரணம் வழங்கியதுடன், அவர் வெளிநாட்டு குடிமகன் அட்டை வைத்துள்ள தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் என்பதை கவனத்தில் கொண்டது. இந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் உள்ளது.