அதிக நச்சுதன்மை கொண்ட மெத்தனால் கலந்த போலி சானிடைசர் விற்பனை…. மாநிலங்களுக்கு சி.பி.ஐ. எச்சரிக்கை..

 

அதிக நச்சுதன்மை கொண்ட மெத்தனால் கலந்த போலி சானிடைசர் விற்பனை…. மாநிலங்களுக்கு சி.பி.ஐ. எச்சரிக்கை..

மோசடி கும்பல் அதிக நச்சுதன்மை கொண்ட மெத்தனாலை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட போலி சானிடைசரை விற்பனை செய்வதாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல்துறை மற்றும் அமலாக்கத்துறைக்கு சி.பி.ஐ. எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இன்டர்போல் கொடுத்த ரகசிய தகவல் அடிப்படையில், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கோவிட்-19 தொடர்பாக மருத்துவ கருவிகள் சப்ளையராக மற்றொரு மோசடி கும்பல் செயல்படுவதாகவும் போலீஸ் அதிகாரிகளுக்கு சி.பி.ஐ. எச்சரிக்கை செய்துள்ளது.

அதிக நச்சுதன்மை கொண்ட மெத்தனால் கலந்த போலி சானிடைசர் விற்பனை…. மாநிலங்களுக்கு சி.பி.ஐ. எச்சரிக்கை..

சி.பி.ஐ. தகவல்படி, கோவிட்-19 சம்பந்தப்பட்ட கருவிகளுக்கு தட்டுபாடு நிலவும் சூழலுக்கு மத்தியில், சில குற்றவாளிகள் பி.பி.இ. கிட்ஸ் மற்றும் இதர கோவிட்-19 மருத்துவ கருவிகள் சப்ளையர்கள் போர்வையில் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார அதிகாரிகளை சந்திக்கின்றனர். கருவிளுக்கு தட்டுபாடு நிலவும் நெருக்கடியான சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக்கி கொண்டு, கருவிகளை சப்ளை செய்ய ஆன்லைன் வாயிலாக முன்பணம் செலுத்தும்படி மருத்துவமனைகள் மற்றும் அதிகாரிகளிடம் கூறுகின்றனர்.

அதிக நச்சுதன்மை கொண்ட மெத்தனால் கலந்த போலி சானிடைசர் விற்பனை…. மாநிலங்களுக்கு சி.பி.ஐ. எச்சரிக்கை..

மருத்துவமனை மற்றும் அதிகாரிகளிடமிருந்து முன்பணத்தை பெற்ற பிறகு, சொன்னப்படி கருவிகளை சப்ளை செய்யாமல் ஏமாற்றி விடுகின்றனர். இதுதவிர, அதிக நச்சுதன்மை கொண்ட மெத்தனால் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஹேண்ட் சானிடைசரை மோசடி கும்பல் விற்பனை செய்வதாக இன்டர்போல் ரகசிய தகவல் அளித்துள்ளது. கோவிட்-19 தொற்றுநோய் பரவல் சமயத்தில் பல நாடுகளில் இது போன்ற மோசடி சம்பவங்கள் அரங்கேறி உள்ளது. ஆகையால் விரைவாக பணம் சம்பாதிக்க மோசடி கும்பல்கள் பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என சி.பி.ஐ. கேட்டுக்கொண்டது. இதற்கு முன் சர்வதேச சந்தையில் போலி கோவிட்-19 பரிசோதனை கருவிகள் உலா வருவதாக நாடு முழுவதும் உள்ள போலீஸ் அமைப்புகளுக்கு சி.பி.ஐ. எச்சரிக்கை கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.