சாத்தான்குளம் தந்தை மகன் மரணம்; கைதான மேலும் 5 காவலர்களை சிபிஐ விசாரணை செய்ய திட்டம்?!

 

சாத்தான்குளம் தந்தை மகன் மரணம்; கைதான மேலும் 5 காவலர்களை சிபிஐ விசாரணை செய்ய திட்டம்?!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி, விசாரணையைக் கையிலெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணை செய்த போது, கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாத்தான்குளம் தந்தை மகன் மரணம்; கைதான மேலும் 5 காவலர்களை சிபிஐ விசாரணை செய்ய திட்டம்?!

இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணையை சிபிஐ அதிகாரிகள் கையில் எடுத்தனர். அதன் முதற்கட்டமாக கைதான 5 காவலர்களையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்குமாறு சிபிஐ அனுமதி கேட்டது. அதற்கு நீதிபதிகள் ஒப்புக் கொண்ட நிலையில், 5 காவலர்களிடையேயும் தனித்தனியாக சிபிஐ அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக வாக்குமூலம் பெற்றனர். அதனைத் தொடர்ந்து நேற்று முதலில் கைது செய்யப்பட்ட 5 காவலர்களுக்கும் ஜூலை 31 வரை காவல் நீடிக்கப்பட்டது.

இந்த நிலையில் இரண்டாம் கட்டமாக கைது செய்யப்பட்ட 5 காவலர்களையும் விசாரணை செய்ய சிபிஐ மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகிறது. முதலில் 5 காவலர்களிடம் விசாரணை பெற்ற நிலையில், அடுத்த 5 காவலர்களையும் விசாரிக்க வரும் திங்கள்கிழமை மனுதாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.