ரவுண்டுகட்டும் சிபிஐ – திகிலில் திமுக

 

ரவுண்டுகட்டும் சிபிஐ – திகிலில் திமுக

திமுகவினரை இலக்கு வைத்து சிபிஐ உள்ளிட்ட மத்திய அமைப்பினர் நடத்திவரும் புலிப் பாய்ச்சல் அந்தக் கட்சியினரை திகிலில் மூழ்கடித்துள்ளது.’’ அடுத்தது அவர்தான், இல்லை இவர்தான்’’ என்கிற பயம் கலந்த பேச்சுக்கள் திமுக வட்டாரங்களில் பரபரப்பை எகிறச் செய்துள்ளன.
இந்தியாவையே உலுக்கிய 2ஜி வழக்கில் திமுகவைச் சேர்ந்த கனிமொழியும், அ.ராசாவும் விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து

ரவுண்டுகட்டும் சிபிஐ – திகிலில் திமுக

சிபிஐயும், அமலாக்க பிரிவும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வர உள்ளன. இந்தமுறை குற்றம்சாட்டப்பட்ட இருவரும் எளிதில் தப்பிவிடாதபடிக்கு சிபிஐயும், அமலாக்கப் பிரிவும் மிக தீவிரமாக இந்த வழக்கை கையாண்டு வருவதாகக் கூறப்படுகிறது. வழக்கு தொடர்பான சின்ன ஆவணங்களைக் கூட விட்டுவிடாமல் அனைத்தையும் பக்காவாகத் திரட்டி நீதிமன்றத்தின் பார்வைக்குக்

ரவுண்டுகட்டும் சிபிஐ – திகிலில் திமுக

கொண்டுசெல்ல இரு மத்திய அமைப்புகளுமே தயார் நிலையில் உள்ளன.
இந்த வழக்கில் பாதகமாகத் தீர்ப்பு வந்தால் அரசியல் ரீதியாக அது திமுகவிற்கு மிகப் பெரிய பின்னடைவாக இருக்கும் என்கிற வாதத்தில் நூறு சதவீதம் உண்மை உண்டு. இந்தநிலையில்தான் திமுகவிற்கு அடுத்த சோதனையாக பொதுச் செயலாளர் துரைமுருகனை மீண்டும் ரவுண்டுகட்டத் தொடங்கியிருக்கிறது சிபிஐ.
கடந்த எம்பி தேர்தலில் வேலூர் தொகுதியில் திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் களமிறக்கப்பட்டார். திமுக சார்பில் தொகுதி முழுக்க பணப்பட்டுவாடா நடப்பதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து துரைமுருகன் வீடு , அவரது ஆதரவாளரான பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் அவரது உறவினர்

ரவுண்டுகட்டும் சிபிஐ – திகிலில் திமுக

வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். துரைமுருகன் வீட்டில் கணக்கில் வராத 10 லடசத்து 50 ஆயிரமும், பூஞ்சோலை சீனிவாசன் உறவினர் வீட்டில் 11 கோடியே 48 லட்சமும், பூத் சிலிப்புடன் கூடிய வாக்காளர் பட்டியலும் கைப்பற்றப்பட்டன. இதன் தொடர்ச்சியாக அங்கு தேர்தலும் ரத்து செய்யப்பட்டது. கதிர் ஆனந்த் உள்ளிட்ட மூவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

ரவுண்டுகட்டும் சிபிஐ – திகிலில் திமுக


கொஞ்ச காலம் அடங்கிக் கிடந்த இந்த வழக்கு விசாரணை தற்போது மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் பணப்பரிமாற்றத் தகவல்கள் இடம்பெற்றுள்ள டைரி உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன.

ரவுண்டுகட்டும் சிபிஐ – திகிலில் திமுக


சிபிஐயின் இந்த அதிரடி அட்டாக், துரைமுருகன் தரப்பை நிலைகுலையச் செய்திருக்கிறது. அத்துடன் திமுகவைச் சேர்ந்த சிலரே ரெய்டுக்குத் தேவையான தகவல்களை கொடுத்ததாகக் கசியும் செய்திகளால் துரை நொந்து நூலாகிவிட்டாராம். குறிப்பிட்ட நபர்கள் பற்றி ஸ்டாலின் கவனத்திற்கு அவர் கொண்டு சென்றுள்ளதாகவும் தகவல்.

ரவுண்டுகட்டும் சிபிஐ – திகிலில் திமுக


இந்த இரண்டாவது அட்டாக் பற்றி சிபிஐ தரப்பில் விசாரித்தபோது, ‘’ நம்பகமான தகவல்களின் அடிப்படையிலேயே நாங்கள் ரெய்டு நடத்துகிறோம். எங்கள் லிஸ்டில் அந்தத் தரப்பில் இன்னும் பல பேர் இருக்கிறார்கள். வரும் நாட்களில் இதெல்லாம் உங்களுக்குத் தெரியவரும்’’ என மர்மமாக புன்னகைக்கிறார்கள்.