பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் மருந்துக்கு வரி விலக்கு!

 

பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் மருந்துக்கு வரி விலக்கு!

இந்தியாவே கொரோனா பிடியில் சிக்கித்தவித்துக்கொண்டிருந்த காலத்தில், அதாவது தடுப்பூசியெல்லாம் கண்டுபிடிக்காத நேரத்தில் கொரோனாவைக் குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடித்துவிட்டோம் என்று கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொரோனில் என்ற மருந்தை பதஞ்சலி நிறுவனம் விளம்பரம் செய்தது. இந்த மருந்து அறிவியல் பூர்வமாக சோதனை செய்யப்பட்டதாகவும் பதஞ்சலி தெரிவித்தது. இதனையடுத்து பதஞ்சலி நிறுவனம் கொரோனில் கிட் என்ற பெயரில் மருந்தின் மாதிரியை வெளியிட்டது. அதன்பின் இந்திய மருத்துவ சங்கத்தின் எதிர்ப்பை தொடர்ந்து அந்த மருந்து விற்பனைக்கு வராமல் முடங்கியது.

பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் மருந்துக்கு வரி விலக்கு!

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக சர்ச்சையை ஏற்படுத்திய பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்கு ஆராய்ச்சி நிறுவன அந்தஸ்து வழங்கியுள்ள மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு வரி விலக்கு அளித்துள்ளது. மூலிகை தயாரிப்புகளான நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் மற்றும் பற்பசை முதல் உடனடி நூடுல்ஸ் உள்ளிட்ட பொருட்களை தயாரித்துவருவதால் இந்த வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.