சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ரா வெளியிட்ட வீடியோவை நம்பாதீங்க- சிபிசிஐடி

 

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ரா வெளியிட்ட வீடியோவை நம்பாதீங்க- சிபிசிஐடி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி, 10 போலீசாரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இதற்கிடையில் பாடகி சுசித்ரா இந்த சம்பவம் தொடர்பாக ஆங்கிலத்தில் வெளியிட்ட வீடியோ, இச்சம்பவத்தை தமிழகத்தை தாண்டி எடுத்துச் சென்றது. அந்த வீடியோவில் சாத்தான் குளம் சம்பவத்தை அமெரிக்காவில் போலிசாரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்ட் சம்பவத்தோடு ஒப்பிட்டு பேசியிருந்தார். மேலும் இச்சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த சுசித்ரா, “கடந்த எதிர்கட்சி ஆட்சியிலும் இதேப் போன்று சம்பவம் நடந்த வீடியோவை பதிவு செய்ய வேண்டும். அதற்காக 2 கோடி ரூபாய் வரை தனக்கு பேரம் பேசப்பட்டது. அன்றிலிருந்து எனக்கு தூக்கமே வரவில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார்.

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ரா வெளியிட்ட வீடியோவை நம்பாதீங்க- சிபிசிஐடி

இந்நிலையில், சிபிசிஐடி வெளியிட்டுள்ள தகவலில், “ சாத்தான்குளம் தந்தை, மகன் சித்திரவதை மரணம் தொடர்பாக பாடகி சுசித்ரா வெளியிட்ட காணொளி முற்றிலும் உண்மைதன்மையற்றது. இது போன்ற காணொளிகளை வெளியிடுவது வழக்கு விசாரணையை பாதிக்கும். பொதுமக்கள் இத்தகைய காணொளிகளை நம்ப வேண்டாம். அவர் வீடியோக்களை நீக்கியுள்ளர்” என தெரிவித்துள்ளனர்.