காய்கனி, இறைச்சியை சுத்தம் செய்யக் கூடிய சுத்திகரிப்பானை அறிமுகம் செய்தது கவின்கேர் நிறுவனம்

 

காய்கனி, இறைச்சியை சுத்தம் செய்யக் கூடிய சுத்திகரிப்பானை அறிமுகம் செய்தது கவின்கேர் நிறுவனம்

காய்கனி, இறைச்சியை சுத்தம் செய்யக் கூடிய சுத்திகரிப்பானை கவின்கேர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த கொரோனா தொற்றுநோய் காலத்தில் கைகளை கழுவ சானிடைசர்கள், ஹேண்ட் வாஷ்கள் உள்ளன. ஆனால் காய்கறிகள், பழங்கள், இறைச்சிகளை இவ்வாறு சரியான முறையில் சுத்தம் செய்வதற்கு எந்தவொரு சுத்திகரிப்பானும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், கவின்கேர் பிரைவேட் லிமிடெட் தனது புதிய பிராண்டான ‘சாஃபூ’ மூலம் காய்கறிகள், பழங்கள் மற்றும் இறைச்சியை சுத்தம் செய்வதற்காக சுத்திகரிப்பானை வெளியிட்டுள்ளது. ஜூன் 7-ஆம் தேதி அனுசரிக்கப்படும் ‘உலக உணவு பாதுகாப்பு தினத்தை’ முன்னிட்டு சாஃபூ பிராண்டின் சுத்திகரிப்பானை வெளியிட்டுள்ளது.

காய்கனி, இறைச்சியை சுத்தம் செய்யக் கூடிய சுத்திகரிப்பானை அறிமுகம் செய்தது கவின்கேர் நிறுவனம்

இதன் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்களில் இருக்கும் கிருமிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை அகற்றுவதற்காக சாஃபூ சுத்திகரிப்பான் வடிவமைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து காய்கறிகளையும், பழங்களையும் சுத்தம் செய்ய அரசு அதிகாரிகள் மக்களை ஊக்குவித்து வருகின்றனர்.

சாச்செட் வடிவத்தில் தன்னுடைய சுத்திகரிப்பான் தயாரிப்புகளை சில்லறை விற்பனை செய்வதோடு மட்டுமல்லாமல், சாஃபூ பிராண்டு 500 மி.லி பாக்கெட்களில் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. 500 மி.லி பாக்கெட் ரூ.99 ஆகவும், 500 மி.லி இறைச்சி கழுவும் சுத்திகரிப்பான் விலை ரூ.120 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் ஈ-காமர்ஸ் தளங்களில் இவை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.