டெண்டுகர் போலவே கேட்ச் பிடித்த சஞ்சு சாம்சன் – வைரலாகும் வீடியோ

 

டெண்டுகர் போலவே கேட்ச் பிடித்த சஞ்சு சாம்சன் – வைரலாகும் வீடியோ

நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராஸ்தான் ராயல்ஸ் அணியோடு மோதியது கொல்கத்தா நைட்ரைடர்ஸ். முதலில் ஆடிய கொல்கத்தா அணி 174 ரன்களைக் குவித்தது. மோர்கன் அதிரடி ஆட்டம் ஆடினார்.

அடுத்து ஆடிய ராஜஸ்தான் அணி வீரர்களை 137 ரன்களுக்குள் சுருட்டினர் கொல்கத்தா அணி பவுலர்கள். இதனால், அபாரமான வெற்றியைப் பெற்றது கொல்கத்தா.

டெண்டுகர் போலவே கேட்ச் பிடித்த சஞ்சு சாம்சன் – வைரலாகும் வீடியோ

கொல்கத்தா அணி பேட்டிங்கின் போது 17 வது ஓவரை வீச வந்தார் டாம் கரண். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை கிம்மின்ஸ்க்கு வீச அதை தூக்கி அடித்தார். அங்கு ஃபீல்டிங்கில் இருந்த சஞ்சு சாம்சன் மிகவும் கஷ்டப்பட்டு அபாரமாக கேட்ச் பிடித்தார். பிடித்ததும் பின்பக்கம் விழுந்தார். அவரின் பின்னந்தலையில் லேசாக அடிபட, தடவிக்கொண்டே எழுந்திருப்பார். கமெண்ட்ரி பாக்ஸில் இருந்தவர்கள் ரொம்பவே பாராடினர் சஞ்சு சாம்சனை.

டெண்டுகர் போலவே கேட்ச் பிடித்த சஞ்சு சாம்சன் – வைரலாகும் வீடியோ

இந்தக் கேட்ச் சச்சின் டெண்டுல்கருக்கு தான் பிடித்த கேட்சை நினைவுப்படுத்தியிருக்கிறது.

1992 ஆம் ஆண்டில் நடந்த உலககோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான போட்டியில் வீரர் ஒருவர் அடித்ததை சச்சின் டெண்டுல்கர் அற்புதமாக கேட்ச் பிடித்திருப்பார். இந்த விஷயத்தைப் பகிர்ந்திருந்தர் சச்சின். கூடவே சஞ்சு சாம்சனை மனம் திறந்து பாராட்டியும் இருந்தார்.

டெண்டுகர் போலவே கேட்ச் பிடித்த சஞ்சு சாம்சன் – வைரலாகும் வீடியோ

சச்சின் கேட்ச் பிடித்த வீடியோவைக் கட் பண்ணி, சஞ்சு சாம்சன் வீடியோவோடு இணைத்து வெளியிட்டிருக்கிறார் ஒரு ரசிகர்.

அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து நன்றி தெரிவித்திருக்கிறார்.