சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்ப அனுமதிக்கக் கோரி வழக்கு!

 

சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்ப அனுமதிக்கக் கோரி வழக்கு!

சென்னையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனா உறுதியான 80,961 பேரில் 15,606 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 1,318 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் ஆண்கள் 57.89 சதவீதம் மற்றும் 42.11 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட 64,036 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டதாகவும் தெரிவித்துள்ளது.

சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்ப அனுமதிக்கக் கோரி வழக்கு!

இதனிடையே ஊரடங்கு கடுமையாக்கப்படுவதற்கு முன்னர், சென்னை மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வெவ்வேறு மாவட்டங்களுக்கு படையெடுத்தனர். அதனால் பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால், சென்னை மக்கள் வெளியே எங்கும் செல்லாதவாறு தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில், சேசுபாலன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல அனுமதி வழங்குமாறு மனுத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், இ-பாஸ் குறிப்பிட்ட காரணங்களுக்காக மட்டுமே வழங்கப்படுவதால்
ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்கள் மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப அனுமதி அளிக்கமாறும் அவர்களுக்கு உணவு, உறைவிட வசதியை ஏற்படுத்தி கொடுக்குமாறும் குறிப்பிருந்தார். அந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக அரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.