‘சசிகலா, முதல்வர் பற்றி அவதூறுப் பேச்சு’ : உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு!

‘சசிகலா, முதல்வர் பற்றி அவதூறுப் பேச்சு’ : உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு!

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

‘சசிகலா, முதல்வர் பற்றி அவதூறுப் பேச்சு’ : உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு!

‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்னும் தலைப்பில் திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பிரச்சாரத்தின் போது பிற கட்சியினரின் நடவடிக்கைகளை கட்சி நிர்வாகிகள் விமர்சிப்பது வழக்கம். ஆனால், உதயநிதி ஸ்டாலின் ஒரு படி மேலே சென்று தனிப்பட்ட முறையில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். சசிகலாவின் காலில் விழுந்து தான் எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியை பெற்றதாகக் கூறிய அவர், சசிகலா விடுதலைக்கு பிறகு எடப்பாடி அவரிடம் சரண் அடைந்து விடுவார் என்றும் கூறினார். இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியது.

‘சசிகலா, முதல்வர் பற்றி அவதூறுப் பேச்சு’ : உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு!

பெண்களை அவதூறாக பேசும் உதயநிதி ஸ்டாலின், பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என அமமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுகவினர் மத்தியிலும் உதயநிதி ஸ்டாலினின் விமர்சனம் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மன்னிப்பும் கோரினார். இந்த நிலையில், முதல்வர் பழனிசாமி மற்றும் சசிகலா பற்றி அவதூறாக பேசியதால் உதயநிதி ஸ்டாலின் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்கறிஞர் ராஜலட்சுமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.