தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மீது வழக்குப்பதிவு!

 

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மீது வழக்குப்பதிவு!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு மாதத்திற்கு மேலாக டெல்லியில் போராட்டம் தொடருகிறது. விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து வருவதால், கடும் குளிரிலும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குளிரால் இதுவரை 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தமிழகத்தில் காங்கிரஸார் ஆங்காங்கே ஏர் கலப்பையுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மீது வழக்குப்பதிவு!

சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், வேலூரில் அனுமதியின்றி மாநாடு நடத்தியதாக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மாநாட்டில் பங்கேற்ற காங்கிரஸ் மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட 1,000 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. அனுமதியின்றி காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாள், ஏர் கலப்பை மாநாடு நடத்தப்பட்டதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.