காவலர் வாகனம் மோதி தொழிலாளர் உயிரிழந்த சம்பவம்: சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு!

 

காவலர் வாகனம் மோதி தொழிலாளர் உயிரிழந்த சம்பவம்: சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை அடுத்த கீழ நத்தம் பகுதியை சேர்ந்தவர் சீனி. இவரது மகன் சண்முகம்(35). இவர் கடந்த 25 ஆம் தேதி சீவலப்பேரி கிருபா நகர் பகுதியில் நடந்து சென்ற போது, எதிரே பைக்கில் வந்த நெல்லை மாநகர போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் சண்முகம் மீது மோதினார். இந்த விபத்தில் 2 பேரும் படுகாயம் அடைந்த நிலையில், நேற்று காலை சண்முகம் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால் சண்முகத்தின் உறவினர்கள், உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவலர் வாகனம் மோதி தொழிலாளர் உயிரிழந்த சம்பவம்: சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு!

தகவல் அறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள், சண்முகத்தின் மரணத்துக்கு இழப்பீடு தர வேண்டும் என்றும் விபத்தில் ஈடுபட்ட காவலர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்ததில், சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வேகமாக பைக்கை ஓட்டி வந்தது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், காவலர் ஐயப்பன் மீது ஜாக்கிரதையாக இருந்து மரணம் விளைவித்தல், அஜாக்கிரதையாக வாகனம் இயக்குதல் ஆகிய 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.