பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு!

 

பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு!

தடையை மீறி வேல் யாத்திரை நடத்திய எல்.முருகன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு!

கடந்த மாதம் 6ம் தேதி பாஜகவின் வேல் யாத்திரை தொடங்கியது. கொரோனா சூழலில் கூட்டத்தை கூட்ட கூடாது என்பதால் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் அதிமுக அரசு வேல் யாத்திரைக்கு தடை விதித்தது. இருப்பினும், தடையை மீறி திட்டமிட்டதை போல வேல் யாத்திரையை நடத்தி முடிப்போம் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் திட்டவட்டமாக தெரிவித்தார். அதன் படி, ஆங்காங்கே தடையை மீறி வேல்யாத்திரை நடத்தும் பாஜகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பாஜகவின் இந்த வேல் யாத்திரை ஒரு அரசியல் நகர்வாகவே பார்க்கப்படுகிறது.

பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு!

நாளை திருச்செந்தூரில் வேல்யாத்திரையின் நிறைவு விழா நடைபெற உள்ளது. அதில், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்கவிருக்கும் நிலையில் அந்த பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மதுரையில் நேற்று தடையை மீறி வேல்யாத்திரை நடத்திய பாஜக தலைவர் எல்.முருகன், ஹெச் ராஜா உள்ளிட்ட 200 பேர் மீது மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.