விதிகளை மீறி ஆர்ப்பாட்டம்: அதிமுக முக்கிய புள்ளிகள் மீது வழக்குப்பதிவு!

 

விதிகளை மீறி ஆர்ப்பாட்டம்: அதிமுக முக்கிய புள்ளிகள் மீது வழக்குப்பதிவு!

கொரோனா விதிகளை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய பகுதிகளை சேர்ந்த அதிமுகவினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை வீழ்த்தி திமுக ஆட்சி அமைத்தது. தேர்தலின் போது நூற்றுக்கணக்கான வாக்குறுதிகளை திமுக அளித்தது. பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும், சிலிண்டர் மானியம் விலை உயர்த்தப்படும், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் போன்ற பல வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதிகள் எதையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை என அதிமுக குற்றஞ்சாட்டி வருகிறது.

விதிகளை மீறி ஆர்ப்பாட்டம்: அதிமுக முக்கிய புள்ளிகள் மீது வழக்குப்பதிவு!

நீட் தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ளாமலும், பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பதை குறைக்க நடவடிக்கை எடுக்காமலும் திமுக அரசு இருப்பதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக தலைமை அறிவித்தது. அதன் படி நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் தலைமையில் தமிழகம் முழுவதும் நேற்று அதிமுகவினர் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கொரோனா விதிகளின் படி ஆர்ப்பாட்டம் நடத்துமாறு அதிமுக தலைமை அறிவுறுத்தியது. ஆனால் சில இடங்களில் கொரோனா விதிகள் பின்பற்றப்படவில்லை. இந்த நிலையில் அனுமதிஇன்றி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய பகுதிகளை சேர்ந்த அதிமுகவினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதே போல பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும் கொரோனா விதிகள் கடைப்பிடிக்கப்படாததால் அதிமுக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.