வசமாக சிக்கிய நடிகர் மன்சூர் அலிகான் ; பாயும் வழக்குகள்!

 

வசமாக சிக்கிய நடிகர் மன்சூர் அலிகான் ; பாயும் வழக்குகள்!

கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பிய குற்றத்திற்காக நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வசமாக சிக்கிய நடிகர் மன்சூர் அலிகான் ; பாயும் வழக்குகள்!

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 16ஆம் தேதி தடுப்பூசி தடுப்பூசியை சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செலுத்திக் கொண்டார் . அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், நான் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள காரணம் மக்கள் எந்த ஒரு அச்சமுமின்றி அரசு மருத்துவமனைகளை நாடி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் என்றார்.

வசமாக சிக்கிய நடிகர் மன்சூர் அலிகான் ; பாயும் வழக்குகள்!

இதையடுத்து ஏப்ரல் 17ஆம் தேதி விவேக்கிற்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்தார். விவேக் மரணம் பொது மக்கள் மற்றும் திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சூழலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விவேக்கை பார்க்க வந்த நடிகர் மன்சூர் அலிகான் , தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தான் விவேக்கிற்கு இந்த நிலைமை, என்று பரபரப்பான கருத்துக்களை முன்வைத்தார். இந்தியாவில் கொரோனா இல்லை , எல்லாம் ஏமாற்று வேலை என்று சுகாதாரத்துறை செயலாளர் குறித்தும், அரசியல் பிரமுகர்கள் குறித்தும் அவர் பரபரப்பு கருத்துக்களை கூறினார் . இதையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் புகார் அளித்த நிலையில் மன்சூர் அலிகான் மீது வழக்கு தொடர முடிவு எடுப்போம் என்று காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்திருந்தார்.

வசமாக சிக்கிய நடிகர் மன்சூர் அலிகான் ; பாயும் வழக்குகள்!


இதனிடையே போலீசார் வழக்கு பதிவு செய்தால் தம்மை கைது செய்வார்கள் என்று நோக்கத்தில் நடிகர் மன்சூர் அலிகான் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.இந்நிலையில் கொரோனா தடுப்பூசி குறித்து பொய்யான தகவலை பரப்பிய காரணத்திற்காக நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோடம்பாக்கம் மண்டல மருத்துவ அதிகாரி பூபேஷ் அளித்த புகாரின் அடிப்படையில், நடிகர் மன்சூர் அலிகான் மீது தொற்றுநோய் தடுப்பு சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.