நிலத்தை அபகரித்த ராமர் கோயில் அறக்கட்டளை செயலாளர் – குற்றம்சாட்டிய பத்திரிகையாளர் மீது 18 பிரிவுகளில் வழக்கு!

நிலத்தை அபகரித்த ராமர் கோயில் அறக்கட்டளை செயலாளர் – குற்றம்சாட்டிய பத்திரிகையாளர் மீது 18 பிரிவுகளில் வழக்கு!

ராமர் கோயிலுக்காக அயோத்தி நிலத்தைச் சுற்றியுள்ள பல பகுதிகளிலும் ‘ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா’அறக்கட்டளை சார்பில் நிலம் வாங்கியதில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது அயோத்தியில் மார்ச் 18ஆம் தேதி உள்ளூர் நிலம் ஒன்று ரூ.2 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனை அறிந்துகொண்ட அறக்கட்டளையின் நிர்வாகக் குழு உறுப்பினர் அனில் மிஸ்ரா, அயோத்தி மேயர் ரிஷிகேஷ் உபாத்யாயா ஆகியோர் அதே நிலத்தை ரூ.18.5 கோடிக்கு வாங்கியதாகக் கூறப்பட்டது.

நிலத்தை அபகரித்த ராமர் கோயில் அறக்கட்டளை செயலாளர் – குற்றம்சாட்டிய பத்திரிகையாளர் மீது 18 பிரிவுகளில் வழக்கு!

இந்த விவகாரத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவரும் அறக்கட்டளையின் செயலாளருமான சம்பத் ராயின் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டை அவர் தொடர்ந்து மறுத்துவந்த நிலையில், ஊடகவியலாளரான வினீத் நரேன் என்பவர் சம்பத் ராய், அவரது சகோதரர்கள் பிஜ்னோர் மாவட்டத்தில் நில அபகரிப்பில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தியிருந்தார். வெளிநாடு வாழ் இந்தியரான அல்கோ லகோதி என்பவரின் 20,000 சதுர கி.மீ பரப்பளவிலான கோசாலையை சம்பத் ராயும் அவரது சகோதரர் சஞ்சய் பன்சாலும் மிரட்டி அபகரித்துக் கொண்டனர் என்றும் அவர் புகார் தெரிவித்தார்.

நிலத்தை அபகரித்த ராமர் கோயில் அறக்கட்டளை செயலாளர் – குற்றம்சாட்டிய பத்திரிகையாளர் மீது 18 பிரிவுகளில் வழக்கு!

இதற்குப் பின் பன்சால் பிஜ்னோர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். தம் மீதான புகார் குறித்து வினீத் நரேன், அல்கா லஹோட்டி, ராஜ்னிஷ் ஆகிய 3 பேரிடம் விளக்கம் கேட்டதாகவும், அதற்கு அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் தெரிவித்திருந்தார். தற்போது இந்தப் புகாரின் பேரில் வினீத் நரேன் உள்ளிட்ட 3 பேர் மீது எஃப்ஐஆர் உள்பட 18 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சம்பத் ராய் மற்றும் அவரது சகோதரர்கள் மீதான புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.