ஆந்திராவில் கார் – லாரி நேருக்கு நேர் மோதி விபத்து – சிறுமி உள்பட 3 பெண்கள் பலி

ஆந்திராவில் கார் – லாரி நேருக்கு நேர் மோதி விபத்து – சிறுமி உள்பட 3 பெண்கள் பலி

ஆந்திரா

திருப்பதி அருகே கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கர்நாடகாவை சேர்ந்த 13 வயது சிறுமி உள்பட 3 பெண் பக்தர்கள் உயிரிழந்தனர்.

ஆந்திராவில் கார் – லாரி நேருக்கு நேர் மோதி விபத்து – சிறுமி உள்பட 3 பெண்கள் பலி

கர்நாடகா மாநிலம் நங்கிலியை சேர்ந்த விஜயகுமார். இவரது வீட்டு உரிமையாளர் சுப்ரமணியம் ராஜு. நேற்று இவர்கள் இருவரும் தங்களது குடும்பத்தினருடன் 2 கார்களில் ஆந்திராவில் உள்ள திருப்பதி உள்ளிட்ட பல்வேறு கோயில்களுக்கு புனித யாத்திரை சென்றுள்ளனர். பின்னர் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு திருப்பதியில் இருந்து இன்று அதிகாலை அவர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். அப்போது பூத்தலப்பட்டு – நாயுடுப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் காதங்கி பகுதியில் சென்றபோது முன்னாள் சென்ற கார் மீது, சித்தூரில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற லாரி நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளனாது.

ஆந்திராவில் கார் – லாரி நேருக்கு நேர் மோதி விபத்து – சிறுமி உள்பட 3 பெண்கள் பலி

இதில் காரில் அமர்ந்திருந்த விஜயகுமாரின் மனைவி அன்னபூர்ணா (60), அவரது தாயார் ராஜம்மா (80) மற்றும் 14 வயது சிறுமி ஜோதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், மூன்று பேர் காயம் அடைந்தனர். போலீசார் விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு திருப்பதியில் உள்ள ருயா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.