கார் விலையில் தள்ளுபடி – எக்ஸ்சேஞ்ச் போனஸ் ! டாடா மோட்டார்ஸ் அதிரடி!

 

கார் விலையில் தள்ளுபடி – எக்ஸ்சேஞ்ச் போனஸ் ! டாடா மோட்டார்ஸ் அதிரடி!

வாடிக்கையாளர்களை கவரும் வகையில் குறிப்பிட்ட சில கார்களுக்கு அதிரடி தள்ளுபடிகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்க முன்வந்துள்ளது.

கார் விலையில் தள்ளுபடி – எக்ஸ்சேஞ்ச் போனஸ் ! டாடா மோட்டார்ஸ் அதிரடி!

அதன்படி, டாடா டியாகோ கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு காரின் விலையில் 15 ஆயிரம் தள்ளுபடியும், பழைய காரை கொடுத்து புதிய டியோகோ கார் வாங்கினால், கூடுதலாக 10 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியும் வழங்குகிறது. கார்ப்பரேட் வாடிக்கையாளர்கள் என்றால் மேலும் 3 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி பெறலாம் என தெரிகிறது.

கார் விலையில் தள்ளுபடி – எக்ஸ்சேஞ்ச் போனஸ் ! டாடா மோட்டார்ஸ் அதிரடி!

இதேப்போல டைகர் காருக்கு 15 ஆயிரம் மதிப்புள்ள தள்ளுபடி மற்றும் எக்சேஞ்ச் செய்யும் போது அதே அளவில் போனஸ் கிடைக்கும் என தெரிகிறது. கார்ப்பரேட் வாடிக்கையாளர்களாக இருந்தால் மேலும் 7 ஆயிரம் ரூபாய் கூடுதல் தள்ளுபடி பெறலாம் என தெரியவந்துள்ளது.

இதேபோல, டாடா நெக்சான் கார்களை வாங்கும் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைப்பதுடன், டீசல் கார்களுக்கு மட்டும் எக்ஸ்சேஞ்ச் போனஸாக 15 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. குறிப்பாக செப்டம்பரில் விற்பனையாகும் கார்களுக்கு இந்த தள்ளுபடி வழங்கப்படும் என தெரிகிறது.

S.முத்துக்குமார்