தொண்டர்களுக்கு கார், சங்கிலி, ரூ 1 லட்சம் ‘தேர்தல்’ பரிசு: அரசியல் கட்சிகள் அதிரடி

 

தொண்டர்களுக்கு கார், சங்கிலி, ரூ 1 லட்சம் ‘தேர்தல்’ பரிசு: அரசியல் கட்சிகள் அதிரடி

தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் கட்சிகள் பரபரப்பான வேலைகளைத் தொடங்கியுள்ளன.முந்தைய தேர்தல்களில் திமுகவைப் பொறுத்தவரை வாக்காளர்களுக்கு இலவச டி.வி. திட்டம் அறிவிக்கப்பட்டது. பின்னர் அ.தி.மு.க சார்பில் மிக்சி, கிரைண்டர், மின் விசிறி போன்றவை வழங்கப்பட்டன. இதன் பின்னர் வாக்காளர்களுக்கு திரை மறைவில் பணம் கொடுக்கும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது.
இந்த நிலையில் சமீப காலமாக தேர்தல் கமிஷனின் கிடுக்கி பிடியால், வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதில் அரசியல் கட்சிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது.கோடிக்கணக்கான பணம் தேர்தல் கமிஷன் கையில் சிக்கியது. இதற்கிடையே வாக்காளர்களுக்கு முன்பு ரூ 200. ரூ.500 எனக் கொடுத்து வந்த நிலையில் சமீபமாக ரூ 1,000 ஆகி, இனி ரூ 2,000 கொடுத்தால்தான் வாக்கு கிடைக்கும் என்ற உச்ச நிலையை எட்டி விட்டது.

தொண்டர்களுக்கு கார், சங்கிலி, ரூ 1 லட்சம் ‘தேர்தல்’ பரிசு: அரசியல் கட்சிகள் அதிரடி


இதற்கிடையே கட்சித் தொண்டர்கள் முன்பு போல் பரபரப்பாக வேலை செய்வதில்லை என்ற நிலையும் தமிழகத்தில் இருக்கிறது.முன்பு கருணாநிதி, எம்ஜியார் காலத்தில் தொண்டர்கள் தங்கள் சொந்தப் பணத்தை செலவழித்து, குடும்பத்தை மறந்து இரவு, பகலாக வேலை செய்தார்கள். இப்போது அப்படியில்லை. பணம், குவார்ட்டர், பிரியாணி என நிறைய எதிர்பார்க்கிறார்கள்.
இந்த நிலையில், வருகிற தேர்தலில் வழக்கமான இலவசத் திட்ட அறிவிப்புக்களை மேலும் பிரமாண்டமாக அறிவிப்பதோடு, தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கும்

தொண்டர்களுக்கு கார், சங்கிலி, ரூ 1 லட்சம் ‘தேர்தல்’ பரிசு: அரசியல் கட்சிகள் அதிரடி

திட்டத்தையும் அரசியல் கட்சிகள் பின் பற்ற இருக்கின்றன.இதையறிந்த தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் இந்த முறை தேர்தலில் வெற்றிக்கனி பறித்துத் தரும் மாவட்டத் தலைவர்களுக்கு “இன்னோவா” கார் பரிசாகத் தரப்படுமென முன்னதாக அறிவித்துள்ளார்.
அ.தி.மு.கவைப் பொறுத்தவரை பரிசுத் திட்டத்தை இப்போதே தொடங்கி விட்டர்கள். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் 2008-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அதிமுக இளைஞர் பாசறை,இளம் பெண்கள் பாசறை மற்றும்ஜெயலலிதா பேரவை, எம்ஜிஆர்இளைஞர் அணி ஆகிய அமைப்புகளுக்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

தொண்டர்களுக்கு கார், சங்கிலி, ரூ 1 லட்சம் ‘தேர்தல்’ பரிசு: அரசியல் கட்சிகள் அதிரடி


திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் லட்சக்கணக்கில் புதிய உறுப்பினர்களை இணைத்த நிலையில் இப்போது அதிமுகவும் இளைஞர்களை அதிகளவில் இணைக்க இத்தகைய நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதில் பாசறைக்கு அதிக உறுப்பினர்களைச் சேர்க்கும் நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்களுக்கு பரிசுகள் வழங்குவதாகச் சொல்லி பல அ.தி.மு.க.மாவட்டச் செயலாளர்கள், தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளனர்.பல மாவட்ட அதிமுக செயலாளர்கள் சிறப்பாக செயல்படும் நிர்வாகிகளுக்கு தங்க சங்கிலி வரை பரிசுத் திட்டங்களை அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக.. ஒரு பானைச்சோற்றுப் பதமாக தென்காசி வடக்கு மாவட்ட அ.தி..மு.க செயலாளரும் முன்னாள் அமைச்சர் செந்தூர்பாண்டியனின்

தொண்டர்களுக்கு கார், சங்கிலி, ரூ 1 லட்சம் ‘தேர்தல்’ பரிசு: அரசியல் கட்சிகள் அதிரடி

மகனுமான குட்டியப்பா என்கிற கிருஷ்ண முரளியிடம் கேட்ட போது அவர் தனது மாவட்டத்தில் பாசறைக்கு அதிக உறுப்பினர்களைச் சேர்க்கும் நகர கழக நிர்வாகிகளுக்கு ரூ 1 லட்சமும், ஒன்றிய கழக நிவாகிகளுக்கு ரூ50 ஆயிரமும், பேரூர் கழக நிர்வாகிகளுக்கு ரூ 25 ஆயிரமும் பரிசாக தரப்படும் என அறிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.
இதுமட்டுமல்ல…வருகிற தேர்தலில் சிறப்பாக பணியாற்றும் தொண்டர்களுக்கு திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் டிவிஎஸ் இரு சக்கர வாகனம், ஒரு சவரன் மோதிரம், சைக்கிள், என ஏராளமான பரிசுப் பொருட்கள் அறிவிக்கத் திட்டமிட்டுள்ளன. மாவட்டச் செயலாளர்களுக்கு தங்கச் சங்கிலி வரை

தொண்டர்களுக்கு கார், சங்கிலி, ரூ 1 லட்சம் ‘தேர்தல்’ பரிசு: அரசியல் கட்சிகள் அதிரடி

ஏற்பாடாகி வருகிறது.தி.மு.க.வில் இளைஞரணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலின் இது பற்றிய யோசனையை மேலிடத்திற்கு தெரிவித்துள்ளார். வெற்றிக் கனி பறித்து தருவோரை மேடை போட்டு விருதுகளும், பாராட்டுச் சான்றிதழும் வழங்க ஏற்பாடாகி வருகிறது.அதிமுகவை பொறுத்தவரை முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டுமல்லாமல்.நூதனமாக பிரச்சாரம் செய்யும் சாதாரண கட்சித் தொண்டர்களுக்கும் சிறப்பு பரிசுகள் தரப்பட இருக்கின்றனவாம்.
இந்தத் தேர்தலில் சுறு,சுறுப்பாக பணியாற்றும் கிராமத்து கடைக்கோடி தொண்டர்களுக்கு கூட குறைந்த பட்சம், கரை போட்ட வேஷ்டியும், வெள்ளைச் சட்டையும் பரிசாக தரப்பட இருப்பதாகச் சொல்லுகிறார்கள். இது தொடர்பாக பல முன்னணி வேஷ்டி நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளனராம். இத்தகைய பரிசுத் திட்டங்கள் நிச்சயம் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள் -‘ செங்கை’ போஸ்