நம்மில் ஒருவரை கொன்றால் அவர்களில் 3 பேரை கொல்ல வேண்டும் என ஒவ்வொரு ராணுவ வீரர்களிடம் சொல்ல வேண்டும்.. கேப்டன் அமரீந்தர் சிங் ஆவேசம்

நம்மில் ஒருவரை கொன்றால் அவர்களில் 3 பேரை கொல்ல வேண்டும் என ஒவ்வொரு ராணுவ வீரர்களிடம் சொல்ல வேண்டும்.. கேப்டன் அமரீந்தர் சிங் ஆவேசம்

கடந்த திங்கட்கிழமையன்று கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன வீரர்களுடான மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிர் தியாகம் செய்தது தொடர்பாக முன்னாள் ராணுவ அதிகாரியும், தற்போதைய பஞ்சாப் முதல்வருமான கேப்டன் அமரீந்தர் சிங் கூறியதாவது: வன்முறை மோதலில் விலைமதிப்பில்லாத உயிர்களை இழந்ததற்கு பொறுப்புக்கூற வேண்டும். நம் வீரர்கள் மீதான இந்த கொடூரமான தாக்குததலுக்கு முழு தேசமும் பொருத்தமான பதிலடியை எதிர்பார்க்கிறது.

நம்மில் ஒருவரை கொன்றால் அவர்களில் 3 பேரை கொல்ல வேண்டும் என ஒவ்வொரு ராணுவ வீரர்களிடம் சொல்ல வேண்டும்.. கேப்டன் அமரீந்தர் சிங் ஆவேசம்

நம்மில் ஒருவரை கொன்றால் அவர்களில் 3 பேரை கொல்லுங்கள் என எல்லையில் உள்ள நமது வீரர்களிடம் தெளிவாக கூற வேண்டும். இந்திய வீரர்கள் மீதான மிருகத்தனமான தாக்குதலை நடத்திய சீனர்கள் மீது ஏன் துப்பாக்கிச் சூடு நடத்த எந்த உத்தரவும் வழங்கப்படவில்லை. யாரோ ஒருவர் தனது வேலையை செய்யத் தவறிவிட்டார். அவர் யார் என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.

நம்மில் ஒருவரை கொன்றால் அவர்களில் 3 பேரை கொல்ல வேண்டும் என ஒவ்வொரு ராணுவ வீரர்களிடம் சொல்ல வேண்டும்.. கேப்டன் அமரீந்தர் சிங் ஆவேசம்
நமது ஆண்கள் (வீரர்கள்) ஏன் அவர்கள் பயிற்சி பெற்ற வழியில் பதிலடி கொடுக்கவில்லை. அவர்கள் ஆயுதங்களை வைத்திருந்தால் ஏன் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்பதைத தேசம் அறிய விரும்புகிறது. சக வீரர்கள் கொல்லப்படுகையில் அவர்கள் வெளியே உட்கார்ந்து என்ன செய்து கொண்டிருந்தார்கள். என்ன நடந்தது என்பதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன், ஒவ்வொரு வீரர்களும் மற்றும் ஒவ்வொரு இந்தியரும் அறிந்து கொள்ள விரும்புகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.