“பாலியல் குற்றச்சாட்டுகளை மறைக்க முயல்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” – உச்ச நீதிமன்றம் காட்டம்!

“பாலியல் குற்றச்சாட்டுகளை மறைக்க முயல்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” – உச்ச நீதிமன்றம் காட்டம்!

பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான வழக்குகளைக் கம்பளத்தின் அடியில் மறைக்க முயல்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் மாவட்ட நீதிபதி ஒருவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்த வழக்கின் மீது உச்ச நீதிமன்றம் இவ்வாறு கூறியிருக்கிறது. சம்பந்தப்பட்ட முன்னாள் நீதிபதி தாக்கல் செய்த மனுவைத் திரும்பப்பெற்றுக் கொள்ளவும் நீதிமன்றம் வலியுறுத்தியிருக்கிறது.

“பாலியல் குற்றச்சாட்டுகளை மறைக்க முயல்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” – உச்ச நீதிமன்றம் காட்டம்!
“பாலியல் குற்றச்சாட்டுகளை மறைக்க முயல்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” – உச்ச நீதிமன்றம் காட்டம்!

முன்னாள் நீதிபதி தன்னை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியதால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் நீதித்துறை அதிகாரி ஒருவர் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், “ஒரு இளம் நீதித்துறை அதிகாரியிடம் பாலியல் ரீதியாகப் பேசுவது ஒரு நீதிபதிக்கு அழகல்ல” என கண்டித்தது. தன் மீதான வழக்குக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் நீதிபதி முறையீடு செய்தார்.

அந்த மனுவை தலைமை நீதிபதி போப்டே தலைமையில் நீதிபதிகள் போபன்னா, ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதி போப்டே, “பாலியல் குற்றச்சாட்டுகள் ரீதியான வழக்குகளைக் கம்பளத்தின் அடியில் மறைத்துக் கொள்ளும் முயற்சியை நீதிமன்றம் ஒருபோதும் அனுமதிக்காது. உங்கள் மீது குற்றமில்லை என்றால் தைரியமாக விசாரணையை எதிர்கொள்ளுங்கள். உங்கள் தரப்பை நியாயப்படுத்த ஒரு வாய்ப்பு இருந்தால் நீங்கள் விடுவிக்கப்படலாம்” என்று கடுமையாகப் பேசினார். இதன்பின் தனது வழக்கை அந்த முன்னாள் நீதிபதி வாபஸ் பெற்றுக்கொண்டார்.