குறைந்த வாக்கு வித்தியாசத்தில் எஸ்கேப் ஆன முக்கிய புள்ளிகள்!

 

குறைந்த வாக்கு வித்தியாசத்தில் எஸ்கேப் ஆன முக்கிய புள்ளிகள்!

திமுகவின் மூத்த தலைவராக பார்க்கப்படும் துரைமுருகன் காட்பாடியில் 10 முறை போட்டியிட்ட நிலையில் எளிதில் வெற்றி பெற்றுவிடுவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் நேர்மறையாக அவர் வெற்றி நீண்ட இழுபறிக்கு பிறகே கிடைத்தது. ஆரம்பம் முதலே பின்னணியில் இருந்த துரைமுருகன் முட்டிமோதி கடைசியில், அதிமுக வேட்பளர் ராமுவை காட்டிலும் வெறும் 796 வாக்குகள் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றுள்ளார்.

குறைந்த வாக்கு வித்தியாசத்தில் எஸ்கேப் ஆன முக்கிய புள்ளிகள்!

கோவை தெற்கு தொகுதியில் மநீம தலைவர் கமல்ஹாசன், திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள பாஜக சார்பில் வானதி சீனிவாசன், அமமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ துரைசாமி, நாம் தமிழர் கட்சியின் சார்பில் அப்துல் வகாப் ஆகியோர் உட்பட 21 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் கமல் ஹாசன் முன்னிலை வகித்து வந்த நிலையில் இறுதியில் 1,500 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றுள்ளார்.

குறைந்த வாக்கு வித்தியாசத்தில் எஸ்கேப் ஆன முக்கிய புள்ளிகள்!

அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜக தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டது. பாஜக சார்பில் எல்.முருகன், திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இங்கு எல்.முருகன் முன்னணியில் இருந்த நிலையில், கடைசியில் 1,393 வாக்குகள் திமுக வேட்பாளர் கயல்விழி அதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், பாஜக வேட்பாளர் சி.சரஸ்வதி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் சி.சரஸ்வதி 78 ஆயிரத்து 125 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் 77 ஆயிரத்து 844 வாக்குகள் வாங்கிய நிலையில், வெறும் 281 வாக்கு வித்தியாசத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசனை தோல்விடைய வைத்தார் பாஜக வேட்பாளர் சரஸ்வதி.