எயிட்ஸில் தப்பிய முதல் மனிதரைப் புற்றுநோய் பிடித்தது

 

எயிட்ஸில் தப்பிய முதல் மனிதரைப் புற்றுநோய் பிடித்தது

உயிர்கொல்லி நோயாகக் கருதப்படுவது எயிட்ஸ். இதுவரைக்கும் சரியான மருந்து எனத் துல்லியமாகக் கண்டறியப்பட வில்லை. ஆயினும், அதற்கான முயற்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. எயிட்ஸ் குறித்த விழிப்புணர்வை பரவலாக்க ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 1-ம் தேதி உலக எயிட்ஸ் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த 54 வயதுகொண்ட திமோதி ரே பிரவுண் என்பவருக்கு எயிட்ஸ் நோய் இருப்பது தெரிய வந்தது. பிரவுணுக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையால் அவர் நோயிலிருந்து முழுமையாக குணமானார். இதற்கான அறிவிப்பு 2007 – வெளியிடப்பட்டது.

எயிட்ஸில் தப்பிய முதல் மனிதரைப் புற்றுநோய் பிடித்தது

ஸ்டெல்செல் சிகிச்சை அளித்ததன் மூலம் திமோதி ரே பிரவுண் எயிட்ஸிலிருந்து விடுபட்டார். உலகளவில் எயிட்ஸ் நோயிலிருந்து முழுமையாகக் குணம் அடைந்து இயல்புக்குத் திரும்பிய மனிதர் இவரே.

எயிட்ஸில் தப்பிய முதல் மனிதரைப் புற்றுநோய் பிடித்தது

திமோதி ரே பிரவுண் தற்போது எலும்பு புற்றுநோயால் அவதியுறுகிறார். கடந்த பதினைந்து ஆண்டுகளாக அவருக்குப் புற்றுநோய் இருந்தாலும் தற்போது தீவிர நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். புற்றுநோயிலிருந்தும் பிரவுணைக் காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.