சீனா ஆக்கிரமித்ததும் கடவுளின் செயல் என கைவிட முடிவா? – மோடியை வச்சி செய்யும் ராகுல்

 

சீனா ஆக்கிரமித்ததும் கடவுளின் செயல் என கைவிட முடிவா? – மோடியை வச்சி செய்யும் ராகுல்

இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமிப்பு செய்ததும் கடவுளின் செயல் என்று மோடி அரசு கூறுமா என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
லடாக் எல்லைப் பகுதியில் சீனாவில் அத்து மீறல் தொடர்ந்து நடந்து வருகிறது. சீனா 1000 சதுர கிலோ மீட்டர் பரப்பை ஆக்கிரமிப்பு செய்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், பிரதமர் மற்றும் பா.ஜ.க தரப்பில் ஒரு இன்ச்

சீனா ஆக்கிரமித்ததும் கடவுளின் செயல் என கைவிட முடிவா? – மோடியை வச்சி செய்யும் ராகுல்

நிலம் கூட ஆக்கிரமிப்பு செய்யப்படவில்லை என்று கூறப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் சீனா பின்வாங்க வேண்டும் என்று ரஷ்யாவில் நடந்த பேச்சு வார்த்தையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.


இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதில், “நம்முடைய நிலத்தை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது. அதை இந்திய அரசு எப்போது மீட்பதாக திட்டமிட்டுள்ளது? அல்லது இதுவும் கடவுளின் செயல் என கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளதா?” என்று கேட்டுள்ளார்.

சீனா ஆக்கிரமித்ததும் கடவுளின் செயல் என கைவிட முடிவா? – மோடியை வச்சி செய்யும் ராகுல்


ராகுல் காந்தி அரசியல்வாதிதான்… அவர் அரசியல் செய்கிறார் என்றே வைத்துக்கொள்வோம். அவர் எழுப்பும் கேள்வி நியாயமாதாகவே உள்ளது. இதற்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது. எல்லா பிரச்னைகளுக்கும் பதில் அளிக்க வேண்டாம், பிரதமர் கூறிய படி ஆக்கிரமிப்பு நடைபெறவில்லையா, பாதுகாப்புத் துறை அமைச்சர் கூற்றுப்படி ஆக்கிரமிப்பு நடந்ததா… இந்த இரண்டில் எது உண்மை என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.