“அதிமுக, பாஜகவுடன் போக முடியும்…” திருமாவின் பரபரப்பு பேச்சு!

 

“அதிமுக, பாஜகவுடன் போக முடியும்…” திருமாவின் பரபரப்பு பேச்சு!

சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, பிரச்சாரம் என பம்பரமாக சுழன்று வருகின்றனர்.

“அதிமுக, பாஜகவுடன் போக முடியும்…” திருமாவின் பரபரப்பு பேச்சு!

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பாஜகவுக்கு 20, பாமகவுக்கு 23 தொகுதிகள் தரப்பட்டுள்ளது. தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை இன்னும் இழுபறியில் உள்ளது. அதேபோல் திமுக கூட்டணியில் விசிக 6, மதிமுக 6, கம்யூனிஸ்ட் 6, மனித நேய மக்கள் கட்சி 2, முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி, மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு இழுபறியில் உள்ளது.

“அதிமுக, பாஜகவுடன் போக முடியும்…” திருமாவின் பரபரப்பு பேச்சு!

இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன், “ நாங்கள் கடந்த 5 ஆண்டுகளாக எந்த நிபந்தனையும் இல்லாமல் திமுகவுக்கு ஆதரவு அளித்து வருகிறோம். நாங்கள் அவர்களுடன் பேரம் பேசவில்லை. நாங்கள் அதிமுக – பாஜகவுக்கு போகிறோம் என்று கூறி திமுகவுடன் பேரம் பேசியிருக்க முடியும். வாய்க்கு வந்தபடி எல்லோரையும் அவதூறாக பேசிவிட்டு பின் பேரம் பேசுவது என்பது எனக்கு தெரியாத ஒன்று. நாங்கள் 6 தொகுதிகளை வாங்கவில்லை, 6 எம்.எல்.ஏக்களை வாங்கியுள்ளோம்” என்றார்.