கம்போடியாவின் நாயகனாக வலம் வந்த எலி பணியிலிருந்து ஓய்வு

 

கம்போடியாவின் நாயகனாக வலம் வந்த எலி பணியிலிருந்து ஓய்வு

மோப்ப சக்தி மூலம் 71 கண்ணி வெடிகளை கண்டுபிடித்து கம்போடிய நாயகனாக வலம் வந்த எலி தனது பணியில் ஓய்வு பெற்றது.

கம்போடியாவின் நாயகனாக வலம் வந்த எலி பணியிலிருந்து ஓய்வு

2014ஆம் ஆண்டு பிறந்த 7 வயதான மகாவா என்ற அந்த ஆப்பிரிக்க எலி, கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற பழமொழிக்கேற்ப, 2 லட்சத்து 25 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் வெடிகுண்டுகளை நுகர்ந்து கண்டுபிடிக்கும் திறன்கொண்டது.

தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் பயிற்சி பெற்ற அந்த எலி இதுவரை 71 கண்ணி வெடிகளை கண்டு பிடித்து பல உயிர்களை காப்பாற்றியுள்ளது. இதனால், மகவாவிற்கு கடந்த வருடம் தங்கப்பதக்கம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், ஏராளமான கண்ணி வெடிகளைக் கண்டுபிடித்து பலரின் உயிரைக் காப்பாற்றிய எலி மகவா தன் பணியிலிருந்து ஓய்வுபெற்றது.