#CAA_NRC_NPR க்கு எதிராக போராட்டத்தில் தடியடி… பிப் – 14 இரவை கறுப்பு இரவாக்கிய EPS அரசின் காவல்துறைக்கு கடும் கண்டனம்!

 

#CAA_NRC_NPR க்கு எதிராக போராட்டத்தில் தடியடி… பிப் – 14 இரவை கறுப்பு இரவாக்கிய EPS அரசின் காவல்துறைக்கு கடும் கண்டனம்!

இதை கண்டித்து பெண்கள் உள்பட பலரும் போராட்டத்தைத் தொடர்ந்தனர். நள்ளிரவை தாண்டிய இந்த போராட்டம் இன்றும் தொடர்ந்து வருகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, பழைய வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேரமாக அவர்கள்  போராட்டம் நடத்தியதால் போலீசார் அவர்களை கலைந்து  செல்லுமாறு கூறியதாக தெரிகிறது.  

 

இதனால் போலீசார் , மற்றும் போராட்டக்காரர்களுக்கு மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடியடி நடந்தது. இதில் 120 பேர் கைது செய்யப்பட்டனர்.  இதை கண்டித்து பெண்கள் உள்பட பலரும் போராட்டத்தைத் தொடர்ந்தனர். நள்ளிரவை தாண்டிய இந்த போராட்டம் இன்றும் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது  டிவிட்டர் பக்கத்தில், ‘#CAA_NRC_NPR க்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்கள் மீது வன்முறையை ஏவி, பிப் – 14 இரவை கறுப்பு இரவாக்கிய EPS அரசின் காவல்துறைக்கு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.  ஜனநாயகத்தைத் தானும் காப்பாற்றாமல், ஜனநாயக வழியில் போராடும் மக்களையும் ஆவேசமாக அடித்து விரட்டும் அராஜக ஆட்சி இது!’ என்று பதிவிட்டுள்ளார்.