சிந்தியான்னு சொல்வதற்கு பதில் வாய் தவறி சச்சின் பைலட்ன்னு சொல்லி விட்டேன்… மழுப்பிய காங்கிரஸ் தலைவர்

காங்கிரசிலிருந்து விலகி பா.ஜ.க.வில் ஐக்கியமான ஜோதிராதித்ய சிந்தியா அண்மையில் டிவிட்டரில், என் முன்னாள் சகா சச்சின் பைலட் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டால் ஒரங்கட்ட மற்றும் துன்புறுத்தப்படுவதை பார்க்கும்போது கவலையாக இருக்கிறது என பதிவு செய்து இருந்தார். செய்தி நிறுவனம் ஒன்று சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பி.எல். பூனியாவிடம் பேட்டி எடுத்தது. அப்போது சிந்தியாவின் கருத்து குறித்த கேள்விக்கு அவர் பதில் கூறியதாவது:

ஜோதிராதித்ய சிந்தியா

சச்சின் பைலட் தற்போது பா.ஜ.க.வில் உள்ளார். காங்கிரஸ் மீதான பா.ஜ.க.வின் அணுகுமுறை என்ன என்பது அனைவருக்கும் தெரியும். பா.ஜ.க.விடமிருந்து எங்களுக்கு எந்தவொரு சான்றிதழும் தேவை இல்லை. காங்கிரசில் ஒரு தலைவரும், தொண்டரும் மதிக்கப்படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். சச்சின் பைலட் பா.ஜ.க.வில் இணையாத நிலையில் அவர் பா.ஜ.க.வில் உள்ளார் என பூனியா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சச்சின் பைலட்

இந்த செய்தி வெளியான அடுத்த சில நிமிடங்களில் பூனியா இது தொடர்பாக டிவிட்டரில் விளக்கம் அளித்தார். பூனியா டிவிட்டரில், சிந்தியா ஜி பற்றிதான் கேள்வி கேட்கப்பட்டது அந்த வீடியோவில் தெளிவாக உள்ளது. நான் சிந்தியா என்று சொல்வதற்கு பதில் வாய் தவறி சச்சின் பைலட் என கூறிவிட்டேன். தவறுக்கு வருத்தம் என பதிவு செய்து இருந்தார்.

Most Popular

பாபநாசம், சேர்வலாறு அணைகள் நாளை திறப்பு; 10 நாட்களுக்கு திறக்க முதல்வர் உத்தரவு

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் நீர்வரத்து சற்று அதிகரித்த நிலையில், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதே போல காவிரி டெல்டா...

புழல் வாடகை பிரச்னையால் தற்கொலை விவகாரம்! – விளக்கம் கேட்கும் மனித உரிமை ஆணையம்

புழலில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அடித்ததால் பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை அடுத்த புழல் விநாயகபுரத்தைச்...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 173 பேருக்கு கொரோனா : மொத்த பாதிப்பு 10,268 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட5,609 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,63,222 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின்...

திருவள்ளூர் மாவட்டத்தில் 15 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட5,609 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,63,222 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால்...