`எனது பிஎம்டபுள்யூ, ஆடி கார்கள் வைத்துக்கொள்!’- திருப்பி கேட்ட தொழிலதிபருக்கு அதிர்ச்சி கொடுத்த நண்பன்

 

`எனது  பிஎம்டபுள்யூ, ஆடி கார்கள் வைத்துக்கொள்!’- திருப்பி கேட்ட தொழிலதிபருக்கு அதிர்ச்சி கொடுத்த நண்பன்

தனது நண்பன் கேட்டதால் எனது பிஎம்டபுள்யூ, ஆடி கார்களை கொடுத்ததோடு, 15 லட்சம் பணமும் கொடுத்துள்ளார் தொழிலதிபர். பின்னர் இதை திருப்பி கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்துள்ளார் நண்பன். இந்த அதிர்ச்சி சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை புரசைவாக்கம் சாலையம்மா நகரைச் சேர்ந்த கிவிராஜ். இவர் கடந்த 20-ம் தேதி கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று கொடுத்தார். அதில், “எனக்கு கடந்த 2017-ம் ஆண்டு தணிகா என்பவர் அறிமுகமாகினார். தணிகாவை சந்தித்த போது அவர் தன்னை வழக்கறிஞர் என்று கூறினார். அப்போதுமுதல் நானும் தணிகாவும் நல்ல நண்பர்களாகினோம். பின்பு அவர் ஃபைனான்ஸ் தொழில் செய்வதாகக் என்னிடம் கூறினார். இந்தச் சமயத்தில் கடந்த ஜனவரி 2018-ம் அன்று எனது சித்தப்பா ரோஷன் என்பவரிடம் இருந்து பிஎம்டபுள்யூ (2013-ம் ஆண்டு மாடல்) காரை நான் வாங்கினேன். அந்தக்காரை தணிகாவிடம் கொடுத்து 2,00,000 ரூபாய் வாங்கினேன். பின்பு பணத்தை திரும்ப கொடுத்து எனது காரை திரும்ப வாங்கி கொண்டேன்.

`எனது  பிஎம்டபுள்யூ, ஆடி கார்கள் வைத்துக்கொள்!’- திருப்பி கேட்ட தொழிலதிபருக்கு அதிர்ச்சி கொடுத்த நண்பன்

அப்போது காரின் ஆர்.சி புக் தொலைந்து விட்டதாக தணிகா கூறினார். அதை தேடிதருவதாகவும் தெரிவித்தார். சில நாள்களாக என்னை அழைக்கழித்தார். பிறகு என்னுடைய காரை விற்று தருவதாகவும் கூறி பிஎம்டபுள்யூ காரை வாங்கினார். ஆனால் அதற்குரிய பணத்தை எனக்கு தரவில்லை. பிறகு பணத்தை கேட்ட போது எனக்கு ஆடி காரை கொடுக்கிறேன். அதற்கு மேலும் 15,00,000 ரூபாய் தர வேண்டும் என்று கூறினார்.

நானும் அந்தப் பணத்தை கொடுத்தேன். பிறகு ஆடி காரின் ஆர்சி புக் இல்லாத காரணத்தால் அதையும் திரும்ப கொடுத்துவிட்டேன். அதன்பின் தணிகாவிடம் என்னுடைய பிஎம்டள்யூ காரையும் நான் கொடுத்த 15,00,000 ரூபாயை திரும்ப கேட்டேன். அதற்கு தணிகா என்னிடம் கால அவகாசம் கேட்டார். பிறகு திடீரென்று நவம்பர் 2018- அன்று என்னுடைய வீட்டுக்கு வந்து அவருக்கு உடனடியாக கார் வேண்டும் என்று கூறினார். நானும் எனது ஆடி காரை கொடுத்தேன். ஆடி கார், பிஎம்டபுள்யூ கார் மற்றும் பணத்தை ஒரு வாரத்தில் கொடுத்து விடுகிறேன் எனக்கூறினார். ஆனால் இதுநாள் வரை என்னுடைய பிஎம்டபுள்யூ கார், 15,00,00 ரூபாய் மற்றும் ஆடி கார் ஆகியவற்றை என்னிடம் திரும்ப கொடுக்கவில்லை.
அதன்பிறகுதான் எனக்கு தெரிந்தது தணிகா என்னை மீண்டும் மீண்டும் ஏமாற்றியது.

`எனது  பிஎம்டபுள்யூ, ஆடி கார்கள் வைத்துக்கொள்!’- திருப்பி கேட்ட தொழிலதிபருக்கு அதிர்ச்சி கொடுத்த நண்பன்

எனக்கு மனஉளைச்சல் ஏற்படுத்தி பணவிரயம் செய்துள்ளார். அதுசம்பந்தமாக 20.7.2020 அன்று அவருடைய வீட்டிற்கு சென்று என்னுடைய பணத்தையும் காரையும் கொடுத்துவிடுங்கள் என்று கேட்டேன். அதற்கு தணிகா என்னை வீட்டின் அருகே உள்ள ஜங்ஷனில் காத்திருக்கும்படி கூறினார். நானும் காத்திருந்தேன். அப்போது அங்கு வந்த தணிகா மிரட்டும் தோணியில் வீட்டுக்கெல்லாம் வரக்கூடாது என்று கூறினார் . உடனே நான் காரையும் பணத்தையும் கொடுத்துவிடுங்கள் என்று கூறினேன். அதற்கு அவர் இதற்கு மேல் கார், பணம் என்று கேட்டால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார். எனவே தணிகா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி 406, 420, 506 (1) ஆகிய பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து தணிகாவிடம் விசாரணை நடத்தினார். அப்போது பிஎம்டபுள்யூ காரை சென்னையைச் சேர்ந்த சுரேந்தர் போத்ரா என்பவர் மூலம் கோயமுத்தூரைச் சேர்ந்த சதீஷ்குமாரிடம் 15,00,000 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது தெரியவந்தது. அதன்பிறகு கிவிராஜின் ஆடி காரை ஓசூரைச் சேர்ந்த ரவி என்பவருக்கு தணிகா விற்றிருக்கிறார். இதையடுத்து 2 சொகுசு கார்களை பறிமுதல் செய்து தணிகாவை கைது செய்துள்ளனர் காவல்துறையினர்.